தண்ணீர் பஞ்சத்தால் ஐந்தில் இருவருக்கு கொரோனா: ஐ.நா., எச்சரிக்கை

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

ஜெனீவா: 'குடிநீர் பற்றாக்குறை நிலவும் பின்தங்கிய நாடுகளில், கை கழுவுவதற்கு போதிய தண்ணீர் இல்லாததால் ஐந்தில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது' என்ற தகவல் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.



latest tamil news




ஐ.நா., நீர்த்துறை அதிகாரி கில்பர்ட் ஹாங்போ தெரிவித்துள்ளதாவது:

'கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தமான நீரில் கழுவ வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வருகிறது. ஆனால், தண்ணீர் பஞ்சம் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குடிநீர் பற்றாக்குறை நிலவும் பின்தங்கிய நாடுகளில், கை கழுவுவதற்கு போதிய தண்ணீர் இல்லை. அங்கு ஐந்தில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.


latest tamil news




பஞ்சத்தில் 3 பில்லியன் மக்கள்


உலகம் முழுவதும் 3 பில்லியன் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அன்றாடம் குளிக்கவும், துவைக்கவும் தண்ணீர் இல்லாத நிலையில், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை தண்ணீர் கொண்டு கழுவ வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர் இல்லாத காரணத்தால் இவர்கள் கை கழுவுவதை தவிர்க்கின்றனர். இதனால் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. சுத்தமான தண்ணீர் கிடைப்பது பின்தங்கிய நாடுகளில் மிகவும் சிரமம். அழுக்கு படிந்த அல்லது சுத்தமற்ற நீரினால் கைகளைக் கழுவுவது பயனற்றது. இதனால் பிற நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.


latest tamil news




6.7 பில்லியன் டாலர் தேவை


உலகம் முழுவதும் 2030ம் ஆண்டின் இறுதிக்குள் உலக நாடுகள் 6.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை தண்ணீருக்காக செலவழிக்க வேண்டியிருக்கும். இதில் விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீரும் அடங்கும். தண்ணீருக்காக நிதி ஒதுக்கும் இந்த உத்தரவை அனைத்து நாடுகளும் பின்பற்றினாலே ஒழிய நீரின்றி பரவும் நோய்களை தவிர்க்க இயலாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
'மற்ற பின்தங்கிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் அவ்வளவாக இல்லை என்பது ஆறுதலான விஷயம்' என, வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10-ஆக-202021:07:16 IST Report Abuse
skv srinivasankrishnaveni நம்ம தேசம் சுதந்திரம் கிடைச்சு 73வர்சம் ஆச்சுதே தண்ணீர்காஷ்டம் தீந்துதுங்கலா இல்லியே ஏழைகள் பாவம் தண்ணீருக்கு படும் பாடு வோட்டுவாங்கிஜெயிச்சு பங்கலால சகலவசதிகளோடும் வாழும் எம் எல் ஏ எம்பி மந்திரிகளுக்கு எல்லாம் தெரியுமா ??????????தண்ணீர் லாறிவந்தால் நடக்கும் அடிதடி சண்டை அவன்தரைகள் தெரியுமா ????/ நானே சென்னை அண்ணா நகர்லே வாசிச்சபோது தினம் 20குடம் தண்ணீர் தூக்கிண்டு போயிருக்கேன் மூணாவது மாடிலே என் பிளாட் தண்ணீர்காஷ்டம் தாங்காமல் வீட்டையே விற்றுவிட்டு போனோம் தெரியுமா
Rate this:
Cancel
10-ஆக-202019:39:19 IST Report Abuse
ஆப்பு இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் வராது. எல்லோருக்கும் குழாயில் குடிநீர் வரும்னு சொல்லிட்டாங்களே... நிதி கூட ஒதுக்கியாச்சே...
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
10-ஆக-202017:54:09 IST Report Abuse
S. Narayanan நம் தமிழ் நாட்டிலேயே போதிய தண்ணீர் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X