பொது செய்தி

இந்தியா

விமான விபத்தில் மீட்பு பணி செய்த இளைஞர்களுக்கு போலீஸ் மரியாதை

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Kerala, Plane Crash, Police, Kozhikode crash, கேரளா, விமானவிபத்து, இளைஞர்கள், சல்யூட், போலீஸ்

திருவனந்தபுரம்: கேரளா விமான விபத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர் இளைஞர்களை போலீசார் தேடிச்சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கான வந்தே பாரத் இயக்கத்தின்படி துபாயிலிருந்து 10 குழந்தைகள் உள்ளிட்ட 191 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, மோசமான வானிலை காரணமாக, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, ஓடு தளத்திற்கு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்தனர்.


latest tamil news


விமான விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு சென்று தீயணைப்பு படையினருடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த 153 பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த உடனடி நடவடிக்கையால், படுகாயமடைந்த பலருக்கு சரியான நேரத்தில் மருத்துவம் அளிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர். இதனையறிந்த சிஐஎஸ்எப் வீரர்கள், உள்ளூர் காவல்துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர் இளைஞர்கள் தங்கியுள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
11-ஆக-202012:53:37 IST Report Abuse
Swaminathan Chandramouli ஆனால் RSS சேவாபாரதி செய்த சேவையை ஒருவரும் கண்டு கொள்ளவில்லையே , மேலே உள்ள படத்தில் காணப்படுபவர்கள் சேவா பாரதியை சேர்ந்தவர்கள் RSS விங்
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-ஆக-202013:20:59 IST Report Abuse
Rafi இதில் கூட இந அரசியல்....
Rate this:
Cancel
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
10-ஆக-202022:35:45 IST Report Abuse
CHINTHATHIRAI நல்ல உள்ளங்கள் . பல்லாண்டு காலம் நாள் வாழ்வு வாழ வாழ்த்துவோம் .
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஆக-202019:16:07 IST Report Abuse
தமிழ்வேல் இரு பக்கத்திற்கும் பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X