விமான விபத்தில் மீட்பு பணி செய்த இளைஞர்களுக்கு போலீஸ் மரியாதை| Kerala Police's unique gesture to thank locals who helped after Kozhikode crash wins praise | Dinamalar

பொது செய்தி

இந்தியா

விமான விபத்தில் மீட்பு பணி செய்த இளைஞர்களுக்கு போலீஸ் மரியாதை

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (9)
Share
Kerala, Plane Crash, Police, Kozhikode crash, கேரளா, விமானவிபத்து, இளைஞர்கள், சல்யூட், போலீஸ்

திருவனந்தபுரம்: கேரளா விமான விபத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர் இளைஞர்களை போலீசார் தேடிச்சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கான வந்தே பாரத் இயக்கத்தின்படி துபாயிலிருந்து 10 குழந்தைகள் உள்ளிட்ட 191 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, மோசமான வானிலை காரணமாக, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, ஓடு தளத்திற்கு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்தனர்.


latest tamil news


விமான விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு சென்று தீயணைப்பு படையினருடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த 153 பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த உடனடி நடவடிக்கையால், படுகாயமடைந்த பலருக்கு சரியான நேரத்தில் மருத்துவம் அளிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர். இதனையறிந்த சிஐஎஸ்எப் வீரர்கள், உள்ளூர் காவல்துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர் இளைஞர்கள் தங்கியுள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X