தங்கம், வைரத்தாலான கொரோனா மாஸ்க்: 'இது தேவைதானா?' கொதிக்கும் நெட்டிசன்கள்

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஜெருசேலம்: 'கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல்வேறு விதமான முகக் கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. 'ப்ளூடூத் ஸ்பீக்கர்' கொண்ட முகக் கவசம் முதல் தங்கத்தால் ஆன முகக் கவசம் வரை தயாரிக்கப்பட்டு வருகின்றன.latest tamil news
1.5 மில்லியன் டாலர்


இந்நிலையில், இஸ்ரேல் தலைநகர் ஜெருசேலத்தில் உள்ள லீவி தங்கநகை நிறுவனம், 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர கற்களாலான முகக் கவசத்தை தயாரித்துள்ளது. இது உலகின் மிக விலை உயர்ந்த முகக் கவசமாக கருதப்படுகிறது.
18 கேரட் தங்கத்தில், 270 கிராம் எடையிலான இந்த முகக் கவசத்தில், 3,600 வெள்ளை மற்றும் கருப்பு வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த முகக் கவசத்தில், 'என்99' பில்டர் உள்ளது.


latest tamil newsவாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கிணங்க இந்த பில்டர் இந்த முகக் கவசத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் சீன தொழிலதிபர் ஒருவர் இந்த முகக் கவசத்தை விலை கொடுத்து வாங்க உள்ளார். 'இந்த மாஸ்கின் தயாரிப்பு இந்த ஆண்டின் இறுதியில் முடிவடையும்' என, லீவி தங்க நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil newsகொரோனா தாக்கத்தால் தற்போது, உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி அதிகரித்துவருகிறது. இந்த வேளையில் இதுபோன்ற ஆடம்பர தயாரிப்பு தேவைதானா என்ற கேள்வி இந்த நிறுவனத்துக்கு வந்தவண்ணம் உள்ளது. அதற்கு இந்த தங்க நகை நிறுவனம், 'பணம் வாழ்க்கையில் அனைத்தையும் தராது என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த மாஸ்க்கை வாங்கும் வாடிக்கையாளர் இதை அணிந்துகொண்டு தெருவில் நடப்பதை பெருமையாகக் கருதுகிறார். ஆகவேதான் இதைத் தயாரித்துள்ளோம்' எனத் தெரிவித்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
10-ஆக-202019:58:00 IST Report Abuse
பஞ்ச்மணி கூந்தல் இருக்கறவன் அள்ளி முடியறான் இதுல எங்க நம்ப நெட்டிசன்களுக்கு நோக்காடு வாங்குனவன் நம்ப கிட்ட பைசா கேட்கல்லியே அப்புறம் என்ன இதை படிச்சுட்டு புறந்தள்ளிட்டு போயிட வேண்டியது தானே இதுக்கு முக்கியதுவம் குடுத்து நம்ப காண்டை (வயித்தெறிச்சலை) காட்டுனா இந்த மாதிரி புதுசு புதுசா இன்னும் நிறைய கிளம்பும்,
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
10-ஆக-202016:47:26 IST Report Abuse
தமிழர்நீதி இது பரவாயில்லை , அங்கு ஒருவர் நாற்பது கிலோவில் வெள்ளி செங்கலை மண்ணுல புதைத்துவிட்டு வந்துருக்கார் . நாடு நாறி கிடக்குது . சிலர் பலகோடி இந்தியாவின் நிலத்தை வெட்டுக்கிளிக்கும் வறட்சிக்கு கொடுத்துவிட்டு இரண்டரை எக்காரர் நிலத்தில் சாமி வைத்து ஏமாற்ற நினைப்பதை பார்த்தால் கொதிக்குது இந்த கொரோனா காலத்தில் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X