தங்கம், வைரத்தாலான கொரோனா மாஸ்க்: இது தேவைதானா? கொதிக்கும் நெட்டிசன்கள்| Israeli jeweller makes the most expensive coronavirus mask | Dinamalar

தங்கம், வைரத்தாலான கொரோனா மாஸ்க்: 'இது தேவைதானா?' கொதிக்கும் நெட்டிசன்கள்

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (2)
Share

ஜெருசேலம்: 'கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல்வேறு விதமான முகக் கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. 'ப்ளூடூத் ஸ்பீக்கர்' கொண்ட முகக் கவசம் முதல் தங்கத்தால் ஆன முகக் கவசம் வரை தயாரிக்கப்பட்டு வருகின்றன.



latest tamil news




1.5 மில்லியன் டாலர்


இந்நிலையில், இஸ்ரேல் தலைநகர் ஜெருசேலத்தில் உள்ள லீவி தங்கநகை நிறுவனம், 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர கற்களாலான முகக் கவசத்தை தயாரித்துள்ளது. இது உலகின் மிக விலை உயர்ந்த முகக் கவசமாக கருதப்படுகிறது.
18 கேரட் தங்கத்தில், 270 கிராம் எடையிலான இந்த முகக் கவசத்தில், 3,600 வெள்ளை மற்றும் கருப்பு வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த முகக் கவசத்தில், 'என்99' பில்டர் உள்ளது.


latest tamil news



வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கிணங்க இந்த பில்டர் இந்த முகக் கவசத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் சீன தொழிலதிபர் ஒருவர் இந்த முகக் கவசத்தை விலை கொடுத்து வாங்க உள்ளார். 'இந்த மாஸ்கின் தயாரிப்பு இந்த ஆண்டின் இறுதியில் முடிவடையும்' என, லீவி தங்க நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



கொரோனா தாக்கத்தால் தற்போது, உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி அதிகரித்துவருகிறது. இந்த வேளையில் இதுபோன்ற ஆடம்பர தயாரிப்பு தேவைதானா என்ற கேள்வி இந்த நிறுவனத்துக்கு வந்தவண்ணம் உள்ளது. அதற்கு இந்த தங்க நகை நிறுவனம், 'பணம் வாழ்க்கையில் அனைத்தையும் தராது என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த மாஸ்க்கை வாங்கும் வாடிக்கையாளர் இதை அணிந்துகொண்டு தெருவில் நடப்பதை பெருமையாகக் கருதுகிறார். ஆகவேதான் இதைத் தயாரித்துள்ளோம்' எனத் தெரிவித்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X