பொது செய்தி

இந்தியா

ராகுலை சந்திக்க சச்சின் பைலட் முயற்சி

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில காங்., முதல்வர் அசோக் கெலாடுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள, அதிருப்தி காங்., அணி தலைவர் சச்சின் பைலட், ராகுலை சந்திக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.



latest tamil news



'ராஜஸ்தான் மாநில காங்., முதலமைச்சர் அசோக் கெலாட்டை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' எனக்கோரி, சச்சின் பைலட் மற்றும் 18 காங்., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், தனக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிடும்படி, ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு, மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கடிதம் தந்தார். அதன்படி, ஆக., 14ம் தேதி ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தைக் கூட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், சச்சின் பைலட், ராகுலை சந்திக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், காங்., கட்சியின் மூத்த தலைவர்களான அகமது பட்டேல் மற்றும் கே.சி.வேணுகோபால் உடனும் சச்சின் பைலட் தொடர்ந்து பேசி வருவதாகவும், இதனால், நேர்மறையான முடிவுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


latest tamil news



சச்சின் பைலட்டின் வேண்டுகோளை ஏற்று அவரை சந்திக்க ராகுல் நேரம் ஒதுக்கி இருக்கிறாரா என்ற கேள்விக்கு, காங்., தரப்பில் எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

அசோக் கெலாடுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி சரியாக ஒரு மாதம் கழித்து, காங்., தலைமையுடன் பேச்சு நடத்த சச்சின் பைலட் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
10-ஆக-202019:36:42 IST Report Abuse
Raj பாஜக பருப்பு வேகவில்லையோ
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
10-ஆக-202019:29:52 IST Report Abuse
Nagarajan D பேரம் BJP இடம் படியவில்லை போல....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-ஆக-202018:23:16 IST Report Abuse
Lion Drsekar எதுவுமே இல்லாத இந்த நேரத்திலும் சந்திக்க இப்படி ஒரு செய்தி, வாழ்க மன்னர்கள் குடும்பம், இவர்களுக்கே இந்த கதி என்றால் மக்களுக்கு ,,,,? வந்தே மாதரம்
Rate this:
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
10-ஆக-202019:54:28 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. பாவம் நீ என் அலற என்ன உன் கோல்,மோல் வேலைக்கு வெச்சார் ஆப்பு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X