வாஷிங்டன்: கொரோனா தொற்று அடுத்தாண்டுக்குள் பல நாடுகளில் முடிவுக்கு வந்துவிடும். கொரோனா தடுப்பூசி விரைவில் கண்டறியப்படும். 2022க்குள் உலகில் இருந்து கொரோனா முடிவுக்கு வருமென மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று வைரஸ் உலகை ஆட்டிபடைத்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் வயர்டு இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பில்கேட்ஸ் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு தலைகீழாக மாற்றுவது கடினம். நோய்களை அளவிடுதல், புதிய சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சி ஆகியவற்றில் கொரோனா தொற்று புதுமைகளை திறந்து வைத்துள்ளது. பணக்கார உலகத்தால் பெரும்பாலும் 2021ம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர முடியும். மேலும் 2022ம் ஆண்டின் இறுதியில் கொடிய கொரோனா தொற்றின் முடிவை உலகம் முழுவதும் காணமுடியும்.

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் பணியில் பில்கேட்ஸ் அறக்கட்டளையும் பணியாற்றி வருகிறது. கடந்த வாரம், இந்தியா மற்றும் பிற வளர்ந்து வரும் நாடுகளுக்கு, 100 மில்லியன் கொரோனா மருந்து டோஸ்களை அளிக்க புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா, பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை , சர்வதேச தடுப்பூசி கூட்டணியான கேவ் நிறுவனத்திடம் இருந்து 150 மில்லியன் டாலர் நிதியுதவி பெறவுள்ளதாக தெரிவித்தது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்படும் மாதிரி தடுப்பூசிகளான அஸ்ட்ராஜெனிகா மற்றும் நோவாவாக்ஸ் மற்றும் இரண்டும் டோஸ் ஒன்றிற்கு 3 டாலர்களாக விலை நிர்ணயிக்கப்படும். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கும். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் இருக்கும் காவி, கோவாக்ஸ் உடன் இணைந்து உலகெங்கிலும் கொரோனா தடுப்பூசியை வேகமாக வழங்குவதற்கும் சமமாக அணுகுவதற்கும் உத்தரவாதம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் தொற்றுநோய்களுக்கான தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி (CEPI) ஆகியவையும் இதில் அடங்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE