பொது செய்தி

இந்தியா

ஆக.,15ல் கோவாக்சின் தடுப்பு மருந்து வராது: பாரத் பயோடெக் அறிவிப்பு

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஐதராபாத்: பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக கோவாக்சின் தடுப்பு மருந்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதி பயன்பாட்டுக்கு வராது என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் இணைந்து கொரோனா வைரசுக்கு ‛கோவாச்கின்' என்ற பெயரிலான தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி ஆக.,15ம் தேதி
Bharat BioTech, Corona Vaccine, coronavirus, covid 19,  கொரோனா, தடுப்புமருந்து, தடுப்பூசி, கோவாக்சின், பாதுகாப்பு, பாரத்பயோடெக்

ஐதராபாத்: பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக கோவாக்சின் தடுப்பு மருந்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதி பயன்பாட்டுக்கு வராது என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் இணைந்து கொரோனா வைரசுக்கு ‛கோவாச்கின்' என்ற பெயரிலான தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி ஆக.,15ம் தேதி பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தான் இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பாதுகாப்பு முறைகளை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதில் அவசரம் காட்டவில்லை என்று பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.


latest tamil news


இது குறித்து அதன் இயக்குநரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ண எல்லா கூறியதாவது: எங்களைப் பொறுத்தவரை, பாதுகாப்பும் தரமும் மிக முக்கியமானது. தவறான தடுப்பூசி மூலம் அதிகமானவர்களைக் கொல்ல நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் சர்வதேச சமூகங்களால் கண்காணிக்கப்பட்டுள்ளோம். இது நாட்டிற்கும் எங்களுக்கும் மதிப்பளிக்கும் விஷயம். நாங்கள் சிறந்த தரமான தடுப்பூசியை உருவாக்குவோம். இந்திய தடுப்பூசி தயாரிப்பாளர்கள் தரமான மற்றும் மலிவு விலையுள்ள தடுப்பூசிகளை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் நிறுவனம் ஒரு ரோட்டா வைரஸ் தடுப்பூசியை ஒரு டாலருக்கு அறிமுகப்படுத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velayudham - Chennai ,இந்தியா
10-ஆக-202022:21:53 IST Report Abuse
Velayudham This what doing by Modi govt..without knowing effect... Bharat bio tech vaccine Received permission from central government from 15 th August it will be available in market as corona vaccine . Great news today see official permission.
Rate this:
Cancel
10-ஆக-202019:33:26 IST Report Abuse
ஆப்பு என்னமா ஒரு பில்டப் குடுத்தாங்க... சாதித்த தமிழர்... ஆ..ஊன்னு... பெரியவர் மாதிரியே எல்லோரும் வாயால வடை சுட கத்துக்கிட்டிருக்காங்க. பிழைச்சுப்பாங்க.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
12-ஆக-202013:47:50 IST Report Abuse
Chowkidar NandaIndiaஎன்னமோ நாட்டை சிங்கப்பூர் லெவலுக்கு கொண்டு போன மாதிரி பில்ட் அப் கொடுத்து பில்ட் அப் கொடுத்து தானே அறுபது வருடம் வண்டி ஓட்டினார்கள் நேரு முதல் ஊமைத்துரை வரை. இப்போது மட்டும் என்னமோ வாய் கிழிய வசனம் பேசறாங்களே. இப்பிடிப்பட்டவங்கள நம்பி வேற இப்பிடி. என்னமோ போ நாராயணா....
Rate this:
Cancel
10-ஆக-202018:39:25 IST Report Abuse
S SRINIVASAN any international pressure pushed india indigenous vaccine to corner this is clearly visible even delay in marketing given right reasond
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X