உள்நாட்டு விமான சேவையால் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் ; அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | |
Advertisement
புதுடில்லி : உள்நாட்டு விமான சேவையால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதற்காக மார்ச்., முதல்

புதுடில்லி : உள்நாட்டு விமான சேவையால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதற்காக மார்ச்., முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தளர்வுகளின் அடிப்படையில், உள்நாட்டு விமான சேவை மே.,25 முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. அரசு வழிகாட்டுதலின்படி, பல்வேறு விதிமுறைகளுடனும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விமானங்கள் இயக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.


latest tamil news



இது தொடர்பாக இன்று மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், விமான சேவை தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில், தொற்று பயத்தால் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் குறைவாகவே இருந்தனர். அதன்பின் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர ஆரம்பித்தது. மொத்தமாக 56,792 விமானங்களால் 5 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் சேவையை பெற்று தங்களது நகரத்திற்கு செல்கின்றனர். நேற்று மட்டும் சிறப்பு விமானங்களில் 93,062 பேர் பயணித்துள்ளனர். பண்டிகை காலம் நிறைவடைவதால் விமானப் பயணம் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, நாட்டிற்குள் பறப்பதற்கான தனிமைப்படுத்தல் மற்றும் பொது சுகாதார நெறிமுறைகளுக்கான வழிகாட்டுதல்களை கடந்த வாரம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திருத்தியது.


latest tamil news



விமான நிலையங்களில் அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அவர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலமாக சோதனை செய்யப்படுவர். தொற்றுக்கான அறிகுறிகள் இல்லையெனில் மட்டுமே பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். விமான பயணிகளுக்கான டிக்கெட் அதிகரிக்க வாய்ப்பில்லை. தற்போதைய நிலவரப்படி, உள்நாட்டு பாதைகளில் தொற்று நோய்க்கு முந்தைய திறனில் 45 சதவீதத்தை மட்டுமே விமான நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. இவ்வாறு தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X