இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 69.33 சதவீதமாக உயர்வு

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | |
Advertisement
புதுடில்லி : இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் 2 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 69.33 சதவீதமாக அதிகரித்ததாகவும் மத்திய சுகாதாரதுறை தெரிவித்தது.இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. உலகில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைவாக உள்ளதாக

புதுடில்லி : இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் 2 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 69.33 சதவீதமாக அதிகரித்ததாகவும் மத்திய சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. உலகில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைவாக உள்ளதாக முன்பு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்தார். தற்போது நாட்டின் இறப்பு விகிதம் (CFR) 2 சதவீதமாக குறைந்துள்ளது. நோய் பாதிப்புகளை குறைக்க தொடர்ந்து நடத்தப்படும் கணக்கெடுப்பு, பரிசோதனை, அணுகுமுறை அடிப்படையிலான மருத்துவ பரிசோதனைகள், வீட்டு தனிமை ஆகியவற்றின் மூலமாகவும் கொரோனா மீட்பு விகிதம் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


latest tamil news



சுகாதாரதுறை அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 54,859 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது. இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 70 சதவீதத்தை நெருங்குகிறது. சராசரியாக தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் விகிதம் 69.33 சதவீதமாக அதிகரித்தது. மத்திய அரசின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், கடுமையான பாதிப்புகளை திறம்பட நிர்வகிப்பதன் மூலமாகவும் , சுகாதார பணியாளர்களால் பாதிப்பு அதிகமான நபரை பராமரிப்பதன் மூலமாகவும், நாடு முழுவதும் (CFR -Case Fertility Rate) குறைவதற்கான வழியாகும்.


latest tamil news



கொரோனா தொற்று பாதிப்பு முன்பு 2.01 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைந்துள்ளது. அத்துடன் மூன்றடுக்கு மருத்துவமனை மற்றும் அதன் கட்டமைப்பு, மருத்துவர்களின் சிறந்த சிகிச்சை, நோயாளிகளின் ஒத்துழைப்பும் மீட்பு விகிதம் உயர்வதற்காண காரணியாகும். இந்தியாவில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,35,743 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களாக இந்தியா ஒரே நாளில் 60,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகளை உறுதி செய்தது. கடந்த 14 நாட்களில் , கொரோனா பாதிப்புகளில் அதிகரித்தாலும், பாதிப்புகளில் இருந்து 63.8 சதவீத நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளனர். இது கொரோனாவிற்கான மீட்பு விகிதத்தை 63 முதல் 69 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

தற்போது 6,34,945 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்புகளில் 28.66 சதவீதம் ஆகும். கொரோனா மீட்பு விகிதம் ஜூன் மத்தியில் 53 சதவீதமாக இருந்தது. நேற்று நிலவரங்களுடன் ஒப்பிடுகையில் 69.33 சதவீதமாக அதிகரித்தது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 22,15,074 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தொற்றுக்கு பலியானவர்களின் மொத்தஎண்ணிக்கை 44,386 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் 4,77,023 சோதனைகள் நடத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X