பொது செய்தி

இந்தியா

கோழிக்கோடு விமான விபத்து; மீட்புப் பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமை

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020
Share
Advertisement
kozhikode, flight accident, rescue works, 600, isolated, corona, safety, கோழிக்கோடு, விமான விபத்து, மீட்புப் பணி, 600 பேர், தனிமை, கொரோனா

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆக., 7 இரவு துபாயில் இருந்து 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையின் முடிவில் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் இரண்டாக உடைந்தது. இச்சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 18 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்த 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். காயமடைந்த 56 பேர் வீடு திரும்பியுள்ளனர்.


latest tamil news


இந்நிலையில் இவ்விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. விமான விபத்து மீட்புப்பணியில் மலப்புரம் மாவட்ட கலெக்டர், தொழில் பாதுகாப்புப் படையினர், போலீசார், தீயணைப்புப் படையினர். உள்ளூர் மக்கள் என 600 பேர் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X