இடுக்கி நிலச்சரிவில் சிக்கிய மேலும் 6 உடல்கள் மீட்பு

Added : ஆக 10, 2020
Share
Advertisement
 இடுக்கி நிலச்சரிவில் சிக்கிய மேலும் 6 உடல்கள் மீட்பு

இடுக்கி; கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில், மண்ணுக்குள் புதைந்திருந்த, மேலும் ஆறு பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனால், பலி எண்ணிக்கை, 49 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இடுக்கி மாவட்டத்தின் பெட்டிமுடியில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்களில், ஏராளமான தமிழர்கள், கூலி தொழிலாளர்களாக பணியில் உள்ளனர்.

இவர்களில், ஒரு பிரிவினர் தங்கியிருந்த வீடுகள் மீது, 7ம் தேதி அதிகாலை, பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.இதில், வீடுகளும், அவற்றில் இருந்தவர்களும், முழுமையாக மண்ணுக்குள் புதைந்து, 43 பேர் பலியாயினர். மண்ணில் புதைந்தவர்களை மீட்க, தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், போலீசார், பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று, ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பலியானோர் எண்ணிக்கை, 49 ஆக உயர்ந்துள்ளது.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், தொலைபேசி இணைப்புகள், மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன.

அங்கு செல்வதற்கான பாலம், மழையால் சேதமடைந்துள்ளதும், மீட்பு பணிக்கு பின்னடைவாக உள்ளது.இரவிகுளம் தேசிய பூங்காவில், தற்காலிக காவலர் பணியில் இருந்த மணிகண்டன், அச்சுதன், ராஜா, ரேகா மற்றும் டிரைவர்கள் கணேசன், மயில்சாமி ஆகியோரும், புதைந்த வீடுகளில் தங்கியிருந்துஉள்ளனர். இவர்களில், ரேகா, ராஜா ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் கூறியுள்ளனர்.

பலியான தற்காலிக பணியாளர்கள் குடும்பத்தினருக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, மாநில வனத்துறை அமைச்சர், கே.ராஜு கூறியுள்ளார்.இங்குள்ள மலைப்பகுதியில், பெட்டிமுடி பாதுகாப்பான பகுதியாக கருதப்படுவதுடன், இதுவரை நிலச்சரிவு ஏதும் ஏற்பட்டதில்லை என, இரவிகுளம் தேசிய பூங்காவின் உதவி வனவிலங்கு வார்டன், நேரியம் பரம்பில் கூறிஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X