நியாயமற்ற நடைமுறை

Added : ஆக 10, 2020
Share
Advertisement
நியாயமற்ற நடைமுறை

இ.ஐ.ஏ., எனப்படும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து, மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, 150 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே, இறுதி அறிவிக்கை வெளியிடப்படும். அதற்குள், போராட்டம் நடத்த வேண்டும் என, சிலர் குதிப்பதில் நியாயமில்லை.

பிரகாஷ் ஜாவடேகர், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்,

பா.ஜ.,இடைஞ்சல்கள் ஏன்?

மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான வீட்டு வசதி தேவைகளில், 68 சதவீதம் பற்றாக்குறை உள்ளது. தற்போது, டில்லியின் மத்தியில், ராஜ்யசபா ஊழியர்களுக்கு வீட்டு வசதி செய்து தர எடுக்கப்படும் நடவடிக்கையில், சமூக, பொருளாதார மற்றும் சட்ட ரீதியிலான பல இடைஞ்சல்கள் வருவது, ஆச்சரியம்அளிக்கிறது.

வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி

வலியுறுத்துமா மத்திய அரசு?

தி.மு.க., -- எம்.பி., கனிமொழிக்கு, சென்னை விமான நிலையத்தில் நிகழ்ந்த அனுபவம், வழக்கத்துக்கு மாறானது அல்ல. எனக்கும், அது போல, பலமுறை நிகழ்ந்துள்ளது. ஹிந்தி மற்றும் ஆங்கிலம், நம் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி என சொல்லும் மத்திய அரசு, அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும், அவ்விரு மொழிகளும் கட்டாயம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்பதையும், வலியுறுத்த வேண்டும்.

சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X