அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

பீஜிங்: ஹாங்காங்கில் அரசியல் சுதந்திரத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 11 பேருக்கு அமெரிக்கா தடை விதித்த நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரஸ் தொற்று, வர்த்தகம் என அமெரிக்கா - சீனா இடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவ சீனா தான் காரணம் என அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார். இருநாடுகளிடையேயான தூதரக ரீதியான உறவும் மிகவும் மோசமடைந்து வருகிறது. இதனிடையே ஹாங்காங்கில் ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியது மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடுவோரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று, ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் உள்ளிட்டோருக்கு தடை விதிக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். தடை விதிக்கப்பட்ட நபர்களுக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், வர்த்தக ரீதியில் தொடர்பில் இருக்கும் அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்.

அமெரிக்காவின் தவறான நடத்தைக்கு பதிலளிக்கும் விதமாக, ஹாங்காங் தொடர்பான பிரச்சினைகளில் மோசமாக நடந்து கொண்ட தனிநபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது' என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆனால் எந்த மாதிரியான தடை என்பது குறித்து லிஜியன் கூறவில்லை.சீனா தடை விதித்துள்ள நபர்களில், அமெரிக்க மேல்சபை எம்.பிக்களான டெட் க்ரூஸ், மார்கோ ரூபியோ, டாம் காட்டன், ஜோஷ் ஹவ்லி மற்றும் பாட் டூமி மற்றும் பிரதிநிதி கிறிஸ் ஸ்மித், லாப நோக்கமற்ற மற்றும் மனித உரிமை குழுக்களை சேர்ந்தவர்களும் அடங்குவர். கடந்த மாதம், உய்க்குர் முஸ்லீம்கள் விவகாரத்தில் சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா அபராதம் விதித்த நிலையில், குரூஸ், ரூபியோ, ஸ்மித் மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக சீனா தடைகளை அறிவித்தது.


latest tamil news



சீனாவின் சமீபத்திய நடவடிக்கையானது, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட அரசு சாரா நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிரானது ஆகும். அவை, ஜனநாயகத்திற்கான தேசிய எண்டோமென்ட், சர்வதேச விவகாரங்களுக்கான தேசிய ஜனநாயக நிறுவனம், சர்வதேச குடியரசுக் கழகம், சுதந்திர இல்லம் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு ஆகிய ஐந்து அமைப்புகள் ஆகும்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
11-ஆக-202011:18:06 IST Report Abuse
Anand புலியை பார்த்து பூனையும் சூடு போட்டுக்கொள்கிறது.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
11-ஆக-202007:30:52 IST Report Abuse
Balasubramanian Ramanathan திராவிட கட்சிகள், கம்யூனிஸ்ட் இவர்களின் சித்தாந்தமே தாங்கள் சொல்வதைத்தான் அடுத்தவர் கேட்க வேண்டும் ‌. எதிர்பவர்களை அவதூறாக பேசுவதூம், சித்திரவதை செய்வதும் தான். சகிப்பு தன்மை, சமூக நீதி கொடி பிடிப்பதும் அவர்கள் தான். கபடதாரிகள்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
11-ஆக-202004:09:50 IST Report Abuse
blocked user பிரிட்டனுக்கு லீஸ் விட்டார்கள் - அப்பொழுது ஜனநாயகம். திடீர் என்று ஜனநாயகத்தில் ஊறிப்போன மக்களை கம்ம்யூனிஸ்ட் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் விடுவார்களா? சீனாவுக்கு ஹாங்காங் மக்கள் தேவையில்லை, அவர்களின் அயராத உழைப்பு தேவையில்லை - ஆனால் அவர்களின் பணம், சொத்துக்கள் மற்றும் நிலம் வேண்டும். சீனாவின் போலி கம்முனிசம் சீக்கிரம் தோலுரிக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X