கொரோனாவிலும் கொழிக்கும் வசூல்வேட்டை! கொஞ்சி கொஞ்சிப் பேசி அதிகாரி 'சேட்டை'

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 10, 2020 | |
Advertisement
அப்பாடா... இப்பதான் 'ரிலாக்ஸா' இருக்குது,'' என்றவாறு, போனில் பேசியபடி வீட்டு வாசலில் நின்றிருந்த மித்ராவை பார்த்து, வண்டியை நிறுத்தியவாறே, ''ஹாய்,'' சொன்னாள் சித்ரா.''என்னடி, ரிலாக்ஸா இருக்க?'' கேள்வி கேட்டவாறே, வீட்டுக்குள் சென்றாள்.''அக்கா... கொரோனா டெஸ்ட் ரிசல்டில், நெகடிவ் வந்திடுச்சு. அதான்...''''வெரிகுட். அதெல்லாம் பயப்பட்ட காலம் மலையேறிடுச்சு. எங்க
 கொரோனாவிலும் கொழிக்கும் வசூல்வேட்டை! கொஞ்சி கொஞ்சிப் பேசி அதிகாரி 'சேட்டை'

அப்பாடா... இப்பதான் 'ரிலாக்ஸா' இருக்குது,'' என்றவாறு, போனில் பேசியபடி வீட்டு வாசலில் நின்றிருந்த மித்ராவை பார்த்து, வண்டியை நிறுத்தியவாறே, ''ஹாய்,'' சொன்னாள் சித்ரா.

''என்னடி, ரிலாக்ஸா இருக்க?'' கேள்வி கேட்டவாறே, வீட்டுக்குள் சென்றாள்.

''அக்கா... கொரோனா டெஸ்ட் ரிசல்டில், நெகடிவ் வந்திடுச்சு. அதான்...''

''வெரிகுட். அதெல்லாம் பயப்பட்ட காலம் மலையேறிடுச்சு. எங்க பாத்தாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்காங்க. நோய் வந்தாகூட சமாளிச்சிடுவாங்க,''

''உண்மைதாங்க்கா. கொரோனாவை கூட சமாளிச்சுடலாம். ஆனா, இந்த லஞ்சத்தில ஊறவங்களை என்னக்கா பண்றது''

''நீ சொன்னது 'சென்ட் பர்சன்ட்' உண்மைதான்டி. மத்திய அரசின் கரீம் கல்யாண் திட்டத்தில, குடும்ப உறுப்பினருக்கு, அஞ்சு கிலோ அரிசி ப்ரீயா தர்றாங்க. ஆனா, அதை கொடுக்காம சிலர், கள்ள மார்க்கெட்டில் வித்திடறாங்களாம்,''

''இது தெரிஞ்சு, ஆபீசர்கள் ஆய்வு செஞ்சதில், டிஸ்டிரிக்ட்டில், 704 கடையில முறைகேடு நடந்திருக்குதாம்,''''ஏதாவது நடவடிக்கை எடுத்தாங்களா?''

''ம்...ஹூம். வெறும், 53 ஆயிரம் ரூபாய் பைன் போட்டுட்டு, 'கணக்கை' சரிபண்ணிட்டாங்களாம்,''

''அதானே, பார்த்தேன். இவங்களாவது நடவடிக்கை எடுக்கிறதாவது,'' சலித்து கொண்ட மித்ரா,''ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்துல, புது தலைவருங்க புகுந்து விளையாடிட்டு இருக்காங்க...'' என்றாள் சித்ரா.

''இன்வெஸ்ட் செஞ்சதை எடுக்கறாங்க போல,'' சிரித்த மித்ரா, ''இ-பாஸ் நடைமுறையை, 'ஸ்ட்ரிக்ட்' பண்ணிட்டாங்களாம்,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''ஐகோர்ட் சொன்னதாலா?''''இருக்கலாம். தொழில் துறையினர், 'இன்டஸ்ட்ரி பாஸ்' வாங்கிட்டு இருந்தாங்க. அதிகாரிகளின் இந்த வியாபாரத்தை, கலெக்டர் 'குட்டு' வச்சு நிறுத்தியதால், புரோக்கர் நடமாட்டம் குறைஞ்சிருக்கு,'' என்றாள் சித்ரா.

''இப்பவாவது செஞ்சாங்களே. அக்கா, 'டிரஸ்ஸரி'யில், எந்த 'பில் பாஸ்' செய்றதுக்கும், 'கவனிப்பு' இருந்தால் மட்டுமே முடியுமாம். 'ரீசன்டா', ரெவின்யூ ஆபீசர் தனக்கு வர வேண்டிய 'அரியர்ஸ்' பணத்துக்காக, சில ஆயிரம் கப்பம் கட்டித்தான் வாங்கினாராம்,''அப்போது அறைக்குள் வந்த மித்ராவின் அம்மா, 'செல்வியக்கா, வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்,' என சொல்லி கிளம்பினார்.

மீண்டும் அரட்டையை தொடர்ந்த மித்ரா, ''பத்திரப்பதிவு, 'ஆன்லைன்' முறைக்கு மாறியும், லஞ்ச புகார் அதிகமாக வருகிறதாம். போன வருஷம், அத்துறை போலீசார் ஒரு புகார் சம்பந்தமா, விசாரணை நடத்தினாங்க. அதுக்கப்பறம், இப்பதான், இங்கிருந்த ஆபீசரை, டிரான்ஸ்பர் செஞ்சாங்களாம்,''

''செம ஸ்பீடுடி,'' சொன்ன சித்ரா, ''பெருமாநல்லுாரில், ஒரு கம்பெனியில், பொருட்களை ஒரு கும்பல் திருடி சென்றது. கம்ப்ளைன்ட் குடுத்தும், போலீசார் கண்டுக்கலையாம்.

விஷயம் என்னன்னா, பொருளை பறிகொடுத்தவர், அங்கிருக்கும், அதிகாரியான 'சிவனானவர்' மீது, லஞ்சப்புகார் சொன்னாராம். அதனால, அவர், கிடப்பில போட்டுட்டாராம்,''''இதெல்லாம், டூ மச்...'' என்ற சித்ரா, ''லாக்டவுன் அன்னைக்கு, சிற்பம் செய்ற ஊர் ஸ்டேஷனை சேர்ந்த ஒரு லேடி, பாதி ஷட்டர் திறந்திருந்த கடைகளுக்கு போய் மிரட்டி, தலைக்கு மூவாயிரம் 'பைன்' போட்டுட்டாங்களாம் அதிகாரிக்கு தெரிஞ்சும், 'கம்'னு விட்டுட்டாராம்,'' என்றாள்.

''அக்கா, நீங்க சொல்ற மாதிரி, அதே லாக்டவுன் நாளில், பல்லடம் ரோடு, 'செக்போஸ்ட்'டில், வண்டியையை புடிக்கும் போலீசார், 'சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாய்யா'னு சொல்லி அனுப்பிடறாங்க. ஒன்னும் வாங்காம வர்றவங்ககிட்ட, 500, ஆயிரம்னு வாங்கிட்டு அனுப்பிடறாங்களாம்,''

''பணத்தை குடுத்து போஸ்டிங் வாங்கிட்டு வர்றதால்தான், இப்படி எல்லாம் நடக்குது,''

''என்னக்கா, சொல்றீங்க''''மித்து, கோழிப்பண்ணை ஊரில் போலீஸ் அதிகாரியை, திடீர்னு, சேலத்துக்கு மாத்திட்டாங்க. இத தெரிஞ்சுகிட்ட, ஒருத்தர், கோவை வி.ஐ.பி.,யை 'கவனிச்சு' அந்த இடத்துக்கு வந்துட்டாரு,''''இவங்களை, அந்த ஸ்ரீராமச்சந்திரமூர்த்திதான் காப்பாத்தணும்,'' என்ற மித்ரா, ''அக்கா... ஆனா, ஒரு சில நல்லவங்களும் இருக்கத்தானே செய்றாங்க...''

''யாருடி அது?''''... மங்கலம் ஸ்டேஷனுக்கு சமீபத்தில், 'டிரெயினிங்' அதிகாரி ஒருத்தரு போனாரு. அவரு வந்த நாளில் இருந்து சட்டவிரோத செயல்களுக்கு 'செக்' வச்சிட்டாராம். இதை பார்த்த, ஸ்டேஷன் அதிகாரியும், போலீசாரும் மிரண்டுட்டாங்களாம்,''''சபாஷ், அதிகாரின்னா இப்டித்தான் இருக்கோணும். இந்த மாதிரி இருக்கக்கூடாது?'''

'எந்த மாதிரிங்க்கா''''மாவட்ட பஞ்சாயத்து ஆபீசில் உள்ள ஒருத்தர், இதுக்கு முன்னாடி பேசின ஏரியாவில், மேம்பாட்டு பணிக்கு டெண்டர் விட்டதில், கான்ட்ராக்டரிடம், 'லகர'த்தில, வரி வசூல் செஞ்சிட்டாராம். இதே ஆபீசர், தன்னோட, அலுவலகத்தில் இருந்த, 'காஸ்ட்லி பர்னிச்சர்' பொருட்களை வீட்டுக்கு லவட்டிட்டு போயிட்டாராம். விஷயம் பெரிதானதால், மறுபடியும் கொண்டு வந்து வச்சிட்டாராம்,''

''அக்கா... ராமரோட தம்பிதானே,'' என சொல்லிய மித்ரா, ''லிங்கேஸ்வரர் ஊரில் உள்ள 'அறிவான' அலுவலர் ஒருத்தர், புதிய வீட்டுக்கு டேக்ஸ் போட வருபவர்களிடம், தனியா 'டேக்ஸ்' வசூலிக்கிறார்.

கொடுத்தால்தான், சீக்ரமே வேல நடக்குதாம். 'குண'மான அதிகாரிக்கும் பங்கு போறதால, அவரும் கண்டுக்க மாட்டேங்குறார்.'' ''மித்து, அதே லிங்கேஸ்வரர் 'அருள்'பாலிக்கும் ஊரில் உள்ள ஸ்டேஷன் அதிகாரி, எல்லோரிடமும், 'டெரராக' பேசினாலும், லேடி போலீசாரிடம் வழிகிறாராம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பக்கத்திலுள்ள ஸ்டேஷனுக்கு சென்று ஆறஅமர உட்கார்ந்து, கொஞ்சி கொஞ்சி பேசி வருகிறாராம்.

இவர் ஏற்கனவே, இதே லேடீஸ் மேட்டரில் 'பனிஷ்மென்ட்' வாங்கியவர் என்பது சிறப்பு தகவல்,'' என்ற சித்ரா, ''ஓகே, மித்து, மழை வர்ற மாதிரி இருக்குது. கிளம்பறேன். ேஹப்பி ஜென்மாஷ்டமி,'' என்றபடி புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X