பிரஷாந்த் பூஷண் மீதான வழக்கு விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
Prashant Bhushan, Prashant Bhushan case, supreme court

புதுடில்லி :'உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறிய, பிரபல வழக்கறிஞரும், தன்னார்வலருமான, பிரஷாந்த் பூஷண் மீதான, அவதுாறு வழக்கின் விசாரணை தொடரும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பிரபல வழக்கறிஞரான, பிரஷாந்த் பூஷண், 2009ல், 'தெஹல்கா' என்ற இணையதள ஆங்கில செய்தி தளத்துக்கு பேட்டி அளித்தார்.


latest tamil news



ஊழல் புகார்அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் பலர் மீது ஊழல் புகார்களை கூறினார்.இது தொடர்பாக, பிரஷாந்த் பூஷண் மற்றும் தெஹல்காவின் ஆசிரியராக இருந்த, தருண் தேஜ்பால் மீது, அவதுாறு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நீதித்துறையை விமர்சித்து, பிரஷாந்த் பூஷண் சமீபத்தில், சமூக வலை தளத்தில் பதிவிட்டிருந்தார்.பிரஷாந்த் பூஷண் மீதான இந்த அவதுாறு வழக்குகளை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இம்மாதம், 4ம் தேதி நடந்த விசாரணையின்போது, 'பிரஷாந்த் பூஷண் மற்றும் தருண் தேஜ்பால் மன்னிப்பு கேட்டு அல்லது விளக்கம் அளித்து தாக்கல் செய்ததாகக் கூறப்படும் ஆவணங்கள் ஏதும் இதுவரை வந்து சேரவில்லை.

'அவற்றை ஏற்காத பட்சத்தில் அவதுாறு வழக்கின் விசாரணை தொடரும்' என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.இந்த நிலையில், நீதிபதிகள், அருண் மிஸ்ரா, பி.ஆர். கவால், கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:கருத்து சுதந்திரம் மற்றும் அவதுாறுக்கு இடையே ஒரு சிறிய இடைவெளிதான் உள்ளது. நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டிய நிலையில், நாங்கள் உள்ளோம்.விசாரணைநீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியது, அவதுாறா, இல்லையா என்பதை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. அதனால், இந்த அவதுாறு வழக்கில் விசாரணை நடைபெறும்.இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, ஆக., 17க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.K. GANESAN - chennai ,இந்தியா
11-ஆக-202015:04:18 IST Report Abuse
P.K. GANESAN : நீ அங்கேயே இருந்துகொண்டு உன் ஒட்டக கூட்டத்தை மேய்த்துக் கொண்டிரு. இங்கே வந்து விடாதே
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
11-ஆக-202010:05:53 IST Report Abuse
sankaseshan இவன் தேச துரோகி காஷ்மீர் விவகாரத்தில் தீவிரவாதிகளை சப்போர்ட் பண்ணினவன் தூக்கி உள்ளே போடுங்கள் .
Rate this:
Cancel
Chennai B.S - Chennai,இந்தியா
11-ஆக-202009:02:02 IST Report Abuse
Chennai B.S திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X