பொது செய்தி

இந்தியா

ஆண்டுக்கு 100 யானைகள் பலி: மத்திய சுற்றுச்சூழல் துறை

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Elephants, elephants death, tamil nadu news, tamil nadu

புதுடில்லி: ஒவ்வொரு ஆண்டும், யானைகள் மற்றும் மனிதர்கள் இடையே ஏற்படும் மோதல்களில், 100 யானைகள் உயிரிழப்பதாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக யானைகள் தினம், நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், நாட்டில் உள்ள யானைகள் குறித்த விபரங்களை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நேற்று, வெளியிட்டார். அப்போது பேசிய ஜாவடேகர், யானைகளை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.


latest tamil news


இதையடுத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கூடுதல் டி.ஜி., சவுமித்ரா தாஸ்குப்தா கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், யானை மற்றும் மனிதர்களுக்கு இடையே, ஏற்படும் மோதல்களில், 100 யானைகள் உயிரிழக்கின்றன; யானைகள் தாக்கி, 500க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், யானைகளை பாதுகாப்பதற்காக, மத்திய வனத்துறை அமைச்சகம், பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த, 2017ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
11-ஆக-202007:57:11 IST Report Abuse
Mirthika Sathiamoorthi You mean every year 100 times we must light the oil lamp and pray?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஆக-202001:18:21 IST Report Abuse
தல புராணம் இது பத்தி சங்கி மினிஸ்டர் லவ்டேக்கர் கருத்து என்னவோ..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X