11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு; சபாநாயகருக்கு 4 வாரம் அவகாசம்

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
பன்னீர்செல்வம், சபாநாயகர், அவகாசம், தகுதி நீக்க வழக்கு

புதுடில்லி : தமிழக துணை முதல்வராக உள்ள, பன்னீர்செல்வம் உள்பட, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய, சபாநாயகருக்கு, நான்கு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர், இ.பி.எஸ்., அரசுக்கு எதிராக, 2017ல் சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பின்போது, பன்னீர்செல்வம் உள்பட, 11 அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்த்து ஓட்டளித்தனர். பின்னர் நடந்த அரசியல் மாற்றத்தில், பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைந்தது. பன்னீர்செல்வம் துணை முதல்வரானார்.

அ.தி.மு.க., கொறடாவின் உத்தரவை மீறி ஓட்டளித்த, பன்னீர்செல்வம் உள்பட, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த, ஜூலை, 8ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யும்படி, சபாநாயகர் மற்றும் 11 எம்.எல்.ஏ.,க்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றப் பதிவாளர் அறையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அவகாசம் அளிக்கும்படி, சபாநாயகர் தனபால் சார்பில் கோரப்பட்டது. அதையேற்று, நான்கு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
12-ஆக-202022:04:59 IST Report Abuse
K.n. Dhasarathan எத்தனை முறைதான் கால அவகாசம் வாங்குவர் தனபால் ? அந்த நீதிபதிக்கும் கூட சலிப்பு தட்டவில்லையா ? ஐயா கால அவகாசம் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் தான் என்று சொல்லிவிடுங்களேன் எல்லோருக்கும் நேரம் மிச்சம் , செலவும் மிச்சம் .
Rate this:
Cancel
Roy -  ( Posted via: Dinamalar Android App )
11-ஆக-202022:55:42 IST Report Abuse
Roy AIADMK issued whip, AIADMK has to appeal to the speaker on disqualification, AIADMK chose not to appeal, DMK has no locus standi in this matter, in simple words the affected party is silent, the passer bye DMK is making noise
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
11-ஆக-202017:45:11 IST Report Abuse
Srinivas மேலே இருப்பவரின் பூரண ஒத்துழைப்பும், துணையும் இருப்பதால்தான் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ரைடுகள் அப்படியே கிடப்பில் உள்ளது. எல்லா ரைடுகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மக்கள் அதிகமாக எதிர்பார்த்தனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X