பொது செய்தி

தமிழ்நாடு

நூலகம் சென்று படித்தாலே ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறலாம்

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement

ஆனைமலை:''நுாலகம் சென்று படித்தாலே ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறலாம்,'' என, சிவில் சர்வீஸ் தேர்வில், 119வது இடம் பிடித்த, விவசாய கூலித்தொழிலாளியின் மகன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.



latest tamil news



பொள்ளாச்சி அடுத்த மாரப்பகவுண்டன்புதுாரை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி முத்துமாணிக்கம். இவரது மகன் முருகானந்தம் திருச்சி அண்ணா பல்கலையில், 2013ம் ஆண்டு, பி.இ., (இ.இ.இ.,) படித்தார். 2013ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்று, இளநிலை உதவியாளராக பணியாற்றினார்.


latest tamil news



2019ல், குரூப் -- 2 தேர்வில் வெற்றி பெற்று, திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில், கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். தற்போது ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேசிய அளவில், 119வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.முருகானந்தம், கூறியதாவது:நான்காவது முயற்சியில், ஐ.ஏ.எஸ்.,க்கு தேர்வாகி உள்ளேன். சிவில் சர்வீஸ் தேர்வை தமிழ் வழியில் தேர்வு செய்து வெற்றி பெற்றுள்ளேன்.
விடாமுயற்சி, தகுந்த வழிகாட்டுதலால் வெற்றி பெற்றேன். நுாலக வாசிப்பே, எனது வெற்றிக்கு கைகொடுத்தது. சிவில் சர்வீஸ் என்றாலே ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க வேண்டுமென்ற எண்ணத்தால், பல அரசுப்பள்ளி மாணவர்கள் இத்தேர்வை எழுத தயங்குகின்றனர்.அரசு பள்ளியில் படித்த நான், முதல்நிலை தேர்வை ஆங்கிலத்தில் எழுதி, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வை தமிழ் வழியிலேயே தேர்வு செய்து வெற்றி பெற்றேன். நுாலகங்களை பயன்படுத்தி, விடாமுயற்சியுடன் படித்தாதலே, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஆக-202014:42:34 IST Report Abuse
V Venkatachalam, Chennai-87 தினமலர் தளத்தில் நல்ல செய்தி. தினமலருக்கு நன்றி நன்றி.
Rate this:
Cancel
P.S.Balajrishnan - Salem,இந்தியா
11-ஆக-202014:32:13 IST Report Abuse
P.S.Balajrishnan மிக சாதாரணமான ஏழை குடிமகனும் விடா முயற்சியும், தேடலும் இருந்தால் வாழ்வில் சாதனை படைக்க முடியும் என்று முன் உதாரணமாக இருக்கும் இந்த தன்னடக்கமுள்ள வெற்றியாளர் வாழ்வில் பல சாதனைகள் படைத்து நாட்டுப் பணியாற்ற வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஆக-202012:41:12 IST Report Abuse
Yaro Oruvan வாழ்த்துக்கள்.. படித்த தகுதியான நபர்கள் மேலே வருவதை பார்க்கும்போது ஒரு நம்பிக்கை பிறக்கின்றது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X