ஸ்வப்னாவின் ஜாமின் மனு சிறப்பு நீதிமன்றம் நிராகரிப்பு

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கொச்சி: கேரள தங்க கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் மீது, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரது ஜாமின் மனுவை, சிறப்பு நீதிமன்றம், நேற்று நிராகரித்தது.



latest tamil news



.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, 15 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது.திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு வந்த பார்சலில், கடத்தி வரப்பட்ட தங்கத்தை, சுங்கத் துறை அதிகாரிகள், ஜூலை, 5ல், பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில், சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், கே.டி.ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களது கூட்டாளியான பைசல் பரீத் என்பவரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை, இந்தியா கொண்டு வரும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவ்வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்கத் துறை, வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் மீது, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் கோரி, கொச்சியில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இம்மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, பொருளாதார குற்றத்தின் கீழ் வரும் இவ்வழக்கில், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஸ்வப்னா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, என்.ஐ.ஏ., தரப்பில், பதில் அளிக்கப்பட்டது. அதன் விபரம்:தங்க கடத்தல் வாயிலாக கிடைத்த பணத்தில், பல பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ரமீஸ் என்பவர், பல பயங்கரவாத அமைப்புகளுடன்,நேரடி தொடர்பில் இருந்துள்ளார். இவர், ஆப்பிரிக்கா உட்பட பல வெளிநாடுகளுக்கு, பலமுறை சென்று வந்துள்ளார்.


latest tamil news



இவருக்கு, சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் உள்ளது.கடந்த ஆண்டு நவம்பர்முதல், கடந்த ஜூலை வரையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயரில், ஸ்வப்னா மற்றும் அவரது குழுவினர்,100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில், தங்கம் கடத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, அவரிடம்தொடர்ந்து தீவிர விசாரணை நடத்த வேண்டியுள்ளது.இவ்வாறு என்.ஐ.ஏ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை, சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
11-ஆக-202008:01:02 IST Report Abuse
Balasubramanian Ramanathan கவலையை விடுங்கம்மா. டெல்லியில் கொஞ்சம் பிஸியாக இருக்கிறார். அடுத்த ஹியரங்கில் பிராஷ்ன்த் பூஷன் கட்டாயம் ஆஜராகி ஜாமின் பெற்று தருவார்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
11-ஆக-202007:57:19 IST Report Abuse
GMM NIA சிறப்பாக பணியாற்றி ஸ்வப்னா மற்றும் சிலரின் தேச விரோத செயல்களை வெளிகொண்டு வந்துள்ளது . இவர்களுக்கு ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்வது முறையல்ல .குற்றம் குறைய ஆதாரம் உள்ள குற்றச்சாட்டிற்கு சாதகமாக பணம் பெற்று வாதாடும் வக்கீல்கள் / ADVOCATES தண்டிக்க பட வேண்டும் . ஆதாரம் உள்ள நிர்வாக குற்றச்சாட்டில் தண்டிக்க வேண்டும் . இல்லாவிடில் குற்றம் குறையாது . கேரளா முதல்வர் பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X