பொது செய்தி

இந்தியா

மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
karnataka, wax statue, wife, odd news

பெல்லாரி: கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் இறந்த தனது மனைவிக்கு மெழுகு சிலை அமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தினைச் சேர்ந்தவர் சீனிவாச குப்தா, பிரம்மாண்டமான வீடு கட்டி கிரஹபிரவேஷம் நடத்த விரும்பினார். ஆனால் அவருடைய மனைவி உயிருடன் இல்லை கடந்த சில வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார்.


latest tamil news



இதனால் மனம் வருந்திய சீனிவாச குப்தா தனது மனைவியைப் போல மெழுகு சிலை ஒன்றை சோபாவில் அமர்ந்த நிலையில் செய்தார். அச்சு அசலாக தனது மனைவியின் முக சாயலுடன் இருந்த மெழுசிலைக்கு மனைவிக்கு பிடித்த பிங்க் நிற புடவை அணிவித்து அதனுடன் அமர்ந்து புகைப்படமெடுத்துக்கொண்டார்.


latest tamil news




அவருடைய மனைவியே நேரில் வந்து குடும்பத்துடன் புதுமனை விழாவை கொண்டாடியது போல இருந்தது. சீனிவாச குப்தாவின் 2 மகள்களும் அப்பா அம்மாவை உட்கார வைத்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதன் வீடியோ,புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
13-ஆக-202003:10:44 IST Report Abuse
Sathish எப்படா சனியன் நம்மள விடும் வேற ஒண்ண கட்டிக்கலாம் என்று இருக்கும் பல ஆண்கள் மத்தியில் இப்படியும் ஒருவர். நெகிழ்ச்சியான சம்பவம்.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
12-ஆக-202013:03:01 IST Report Abuse
Indian  Ravichandran மனைவி நேசிக்கப்படவேண்டிய பெண் அவளே ஒவ்வொரு கணவனின் வெற்றியை தீர்மனிக்கிறாள் மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் அருமையான வரிகள். மெழுகு சிலைதான் எத்தனை ஆறுதலை குப்தா சாருக்கு கொடுத்து இருக்கும். அபாரம்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
12-ஆக-202013:00:56 IST Report Abuse
Tamilnesan அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X