பொது செய்தி

இந்தியா

நாட்டின் முதல் கழுதைப் பால் பண்ணை : லிட்டர் ரூ.7000க்கு விற்பனை

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
india, donkey milk, donkey dairy, haryana, நாட்டின் முதல் கழுதைப் பால் பண்ணை : லிட்டர் ரூ.7000க்கு விற்பனை

புதுடில்லி : இந்தியாவின் முதல்கழுதைப் பால் பண்ணை ஹரியானாவின் ஹிசார் பகுதியில் திறக்கப்படவுள்ளது. இங்கு ஒரு லிட்டர் கழுதைப் பால் 7000 ரூபாய்க்கு விற்கப்படலாம் என கூறப்படுகிறது.இந்தியாவில் பசு எருமை மற்றும் ஆடு போன்ற விலங்குகள் அவற்றின் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன.

இந்நிலையில் என்.ஆர்.சி.இ. எனப்படும் குதிரை கழுதை உள்ளிட்ட விலங்குகள் குறித்து ஆய்வு செய்யும் தேசிய ஆராய்ச்சி மையம் ஹரியானாவின் ஹிசார் பகுதியில் கழுதைப் பால் பண்ணையை துவங்க திட்டமிட்டுள்ளது.


latest tamil news




அதன்மூலம் 'ஹலாரி' எனப்படும் ஒரு வகையான கழுதை இனத்தின் பாலை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.இதற்காக என்.ஆர்.சி.இ. 10 ஹலாரி கழுதைகளை வாங்கி இனப்பெருக்கம் செய்து வருகிறது.இந்தக் கழுதைகளின் பால் மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது புற்றுநோய் உடல் பருமன் ஒவ்வாமை உள்ளிட்ட பல நோய்களை எதிர்த்து போராடும் திறன் கொண்டது.சிறிய குழந்தைகளுக்கு பசு மற்றும் எருமைப் பால் மூலம் ஒவ்வாமை ஏற்படுவது வழக்கம்.

ஆனால் ஹலாரி கழுதைகளின் பால் ஒவ்வாமை பிரச்னையை ஏற்படுத்தாது.இப்படி மருத்துவ நற்குணங்களை கொண்டுள்ள இந்த கழுதையின் பால் ஒரு லிட்டர் 2000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை சந்தைகளில் விற்கப்படுகிறது.கழுதைப் பால் மூலம் தயாரிக்கப்படும் அழகுசாதன பொருட்களும் விலையும் அதிகம். இது 'சோப் லிப் பாம் பாடி லோஷன்' உள்ளிட்டவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
11-ஆக-202014:07:51 IST Report Abuse
Ramesh Sargam இனிமே வரதட்சிணைக்கு பதில், நாலு கழுதை வாங்கி கொடுக்க சொல்லுங்கள். செம காசு பார்க்கலாம்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-ஆக-202014:03:00 IST Report Abuse
ஆரூர் ரங் தீனி செலவுண்டா ? பழைய பேப்பர் , போஸ்டர் போதுமா ? கவர்ச்சி போஸ்டரை தீனியாக போட்டால் உணர்ச்சி வசப்பட்டு கூடுதலாக பால் கொடுக்குமா ?
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-ஆக-202013:59:42 IST Report Abuse
ஆரூர் ரங் ஊரடங்கு நேரத்தில் பால் கறக்க விடுமா ? உதவிடுமா ? உதை மட்டுமே😄 விடுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X