பொது செய்தி

தமிழ்நாடு

இரு மொழி கொள்கையால் பாதிப்பு; முன்னாள் துணைவேந்தர் கொதிப்பு

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (105)
Share
Advertisement
சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி எழுதியுள்ள கடிதம்: தமிழக அரசின் இரு மொழி கொள்கையால் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். நகர்ப்புற வசதி படைத்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் விரும்பும் எந்த மொழியையும் கற்கும் சுதந்திரம் உண்டு. மும்மொழி

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி எழுதியுள்ள கடிதம்: தமிழக அரசின் இரு மொழி கொள்கையால் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். நகர்ப்புற வசதி படைத்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் விரும்பும் எந்த மொழியையும் கற்கும் சுதந்திரம் உண்டு. மும்மொழி கொள்கையை எதிர்க்கும் தலைவர்களின் குழந்தைகள், பேரன்கள் ஹிந்தி கற்கின்றனர். சிலர் சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்துகின்றனர். இங்கு ஹிந்தி கட்டாய பாடம். கூடுதலாக ஒரு மொழியை கற்பதால் நாம் என்ன இழக்க போகிறோம்.latest tamil news


கடந்த 50 ஆண்டுகளாக மற்ற இந்திய மொழிகளை கற்கும் வாய்ப்பை தடுக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இரு மொழி கொள்கையால் நானே பாதிக்கப்பட்டேன். உயர் படிப்பு அல்லது வேலைக்காக தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்றபோது மற்றவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் சிரமப்பட்டேன். ஆங்கிலம் பாலமாக திகழ்கிறது என்கின்றனர். ஆனால், மார்க்கெட், பயணங்களின் போது உள்ளூர் மொழியில் பேச வேண்டியது அவசியமாகிறது. ஹிந்தி கற்பது மத்திய அரசு வேலை, ராணுவ பணி, வர்த்தகத்திற்கு உதவும். தேசப்பற்று, தேச ஒற்றுமையை வளர்க்கும். இரு மொழி கொள்கையை ஆதரித்த தலைவர்கள் இப்போது இருந்திருந்தால், தங்களது கொள்கையை மாற்றிக் கொண்டிருப்பர். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil newsபாலகுருசாமி கூறுகையில், புதிய கல்வி கொள்கை தொடர்பாக சமூகத்தின் சிலரால் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. இதனை அரசியல் காரணங்களுக்காக அல்லது தரமான கல்வி பற்றிய அறிவு இல்லாதவர்கள் பரப்புகின்றனர். இதற்கு மாணவர்கள், பெற்றோர் இரையாகி விடக்கூடாது. புதிய கல்வி கொள்கை இந்தியாவின் கல்வி முறையை ஒருங்கிணைக்கிறது. மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை, தேச உணர்வை விதைக்கிறது. பள்ளி, கல்லுாரி அளவில் மாற்றம், கல்லுாரிகளுக்கு தன்னாட்சி, தாராளமய கல்வி, திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் தங்களது தேவைக்கு ஏற்ப கல்வி கொள்கையை வகுக்க சுதந்திரம் தரப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்கால கல்விக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது,''என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
20-ஆக-202001:44:42 IST Report Abuse
.Dr.A.Joseph தமிழகத்தை ஆக்கிரமித்துள்ள வட இந்தியர்கள் அங்கே தமிழை படித்துவிட்டா தமிழகத்தில் வந்து வேலை செய்கிறார்கள். அல்லது வட இந்தியாவில் உலகின் தொன்மையான மொழியான தமிழை பயிற்று விக்கிறார்களா?
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
16-ஆக-202002:58:50 IST Report Abuse
.Dr.A.Joseph இவர் போன்ற சிற்றறிவு படைத்தவர்கள் எல்லாம் துணை வேந்தர்களாக இருந்தது தமிழகத்தின் சார்பாக கேடு.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
16-ஆக-202001:13:38 IST Report Abuse
Aarkay இவர்கள் +2 அல்லது, மிஞ்சி, மிஞ்சி போனால், கௌரவ டிகிரி பட்டம் பெற்றவர்கள். இவர்களுக்கு இதெல்லாம் புரியாது. எதை சொன்னால், ஒட்டு கிடைக்குமென இவர்கள் நம்புகிறார்களோ, அதைத்தான் சொல்வார்கள். இவர்களை சுற்றி இருக்கும் கூட்டமும் அப்படி. (எப்படி சினிமாவில் கதாநாயகன், கதாநாயகியை சுற்றி இருப்பவர்கள் கொஞ்சம் சுமாராக இருப்பார்களோ, அப்படி). They feel comfor and secure with such people around.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X