அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நான் சொல்லும் இடத்தில் பொருட்களை வாங்குங்க...:' திமுக எம்எல்ஏ., மிரட்டலால் தொழில் முனைவோர் திணறல்

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
திமுக, தி.மு.க., எம்எல்ஏ, எம்.எல்.ஏ., மிரட்டல், தொழில் முனைவோர், திணறல்

காஞ்சிபுரம்; 'நான் சொல்லும் இடத்தில் தான், நிறுவனங்களுக்கு தேவையான மரக்கட்டை உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும்' என, எம்.எல்.ஏ., மிரட்டுவதால், தொழில் முனைவோர் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகளில், 10 தொகுதிகளில், தி.மு.க.,வினரே எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.


அச்சுறுத்தல்

இவர்களில், சில எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடு, அடாவடித்தனமாக மாறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.முன்பெல்லாம், தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்யப்படும் பணிகளுக்கு மட்டுமே, எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில், கமிஷன் கேட்கப்பட்டு வந்தது. ஆனால், சில மாதங்களாக, தொகுதியில் நடைபெறும் எந்தவிதமான அரசு ஒப்பந்த பணியாக இருந்தாலும், அதற்கு கமிஷன் பெறுவதை, மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.,க்கள் கட்டாயமாக்கி உள்ளனர். இதனால், ஒப்பந்ததாரர்கள் தங்களது பணியை அரைகுறையாக முடித்து, கணக்கு காட்டி வருகின்றனர்.

இந்த நடைமுறை, உத்திரமேரூர் தொகுதியில்உச்சத்திற்கு சென்றுள்ளது. தொழில் நிறுவனங்களின் பாய்லர்களுக்கு தேவையான மரக்கட்டைகள் உள்ளிட்ட பொருட்களை, தாங்கள் சொல்லும் ஆட்களிடம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என, உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தரும், அவரது ஆதரவாளர்களும், அச்சுறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.உத்திரமேரூர் தொகுதி முழுதும் எம்.எல்.ஏ., - சுந்தர், கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஏற்கனவே, மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த காரணத்தால், தொகுதியில் முக்கிய விவகாரங்களில், இவரது தலையீடு இல்லாமல், எதுவும் நடைபெறுவதில்லை. உத்திரமேரூரை சுற்றியுள்ள பகுதிகளில், இரும்பு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. அந்த தொழிற்சாலைகளுக்கு, அதிகளவில் மரக்கட்டைகள் தேவை. அவ்வாறு தேவைப்படும் மரக்கட்டைகள், பல லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகின்றன.


நிர்ப்பந்தம்

டன் கணக்கில் தேவைப்படும் மரக்கட்டைகளை, எம்.எல்.ஏ., கைகாட்டும் நபரிடம் மட்டுமே, தொழில் நிறுவனங்கள் வாங்க வேண்டும் என, நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக தொடர் புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, உள்ளூரில் வாங்க வேண்டிய வேறு பல பொருட்களையும், தங்களுக்கு வேண்டியவர்களிடம் தான் வாங்க வேண்டும் என, நெருக்கடி தரப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு பாதிப்பில் இருந்து மீண்டு, தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை துவங்கும் சூழலில், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இருந்தால் எப்படி நிறுவனங்களை இயக்க முடியும் என, தொழில் முனைவோர் விரக்தியில் புலம்புகின்றனர். ஏற்கனவே, ஒப்பந்த விவகாரங்களில் தலையிட்டு வந்த அரசியல் கட்சியினர், இப்போது, தொழிற்சாலை விவகாரங்களிலும் தலையிட துவங்குவதாக, அவற்றின் உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.


latest tamil news


இது குறித்து, உத்திரமேரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:உண்மை இல்லைநான் எந்த தொழில் நிறுவனங்களிடமும், மரக்கட்டை உள்ளிட்ட பொருட்களின் வியாபாரம் தொடர்பாக பேசியது இல்லை. நான்ஒன்றும் மர வியாபாரியும் இல்லை. அவ்வாறு தவறாக நடந்து கொண்டிருந்தால், உத்திரமேரூர் மக்கள், என்னை எப்படி நான்காவது முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுத்திருப்பர். தொழிற்சாலைகளின் வியாபாரம் தொடர்பாக, நான் பேச வேண்டிய அவசியமும் இல்லை. அது போன்ற தகவலில் உண்மை இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
12-ஆக-202009:44:57 IST Report Abuse
Sampath Kumar தீய மு க வின் வாரிசுகள் அப்படிதான் இருக்கும்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
11-ஆக-202020:32:23 IST Report Abuse
konanki எதிர் கட்சியாக இருக்கும் போதே இந்த அராஜகம். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாடு சர்வ நாசம்.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
11-ஆக-202016:45:40 IST Report Abuse
Indian  Ravichandran திருட்டு கும்பலின் கூடாரம் கழகங்கள் மாற்றி மாற்றி மக்களை இம்ஸிகிறார்கள். கோவில் கூடாது என்பதல்ல என் வாதம் கோவில் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதே என் வாதம் இப்படி சூப்பர் வசனம் எழுதி அப்புறம் அடித்த கொள்ளை மொத்தமும் கோவிலில் தான் கழகங்கள் இருவரும் அழியும் நாள் எந்நாளோ அந்நாளே எனக்கு பொன்னாள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X