பொது செய்தி

தமிழ்நாடு

கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
கோழிக்கோடு, கோவை, நீளமான ஓடுபாதை,  முக்கியத்துவம்,  புறக்கணிப்பு, விமான விபத்து, airindia, plane crash, coimbatore,

கோவை : கோழிக்கோடு விமான விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை காட்டிலும் நீளமான ஓடுபாதை உள்ளிட்ட வசதிகளை கொண்ட கோவை சர்வதேச விமானநிலையம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.

கோவை, விமானநிலையம், 1940ம் ஆண்டு துவக்கப்பட்டது. இருந்தும், 1995ம் ஆண்டு தான் சர்வதேச விமான சேவை துவங்கியது. 2012ம் ஆண்டு சர்வதேச விமானநிலையமாக தரம் உயர்ந்தது. இங்கிருந்து, நாட்டின் பல்வேறு இடங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும், 40 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. தற்போதைய நிலையில், 9,980 அடி நீள ஓடுபாதை உள்ளது. இந்த ஓடுபாதை நீளத்துக்கு, 70 'சீட்' அளவிலான ஏ.டி.ஆர்., ரக விமானங்கள், 180 'சீட்' அளவிலான ஏர்பஸ் ஏ320, போயிங் 737 விமானங்களை தரையிறக்க அனுமதியுள்ளது.


latest tamil newsஅதேநேரம், 250-350 'சீட்' வரை கொண்ட 'ஜம்போ ஜெட்' விமானங்கள் தரையிறங்க, 10 முதல், 12 ஆயிரம் அடி நீள ஓடுபாதை தேவை.கேரளா, கோழிக்கோடு விமானநிலைய ஓடுபாதை, கோவையை காட்டிலும், 500 அடி வரை நீளம் குறைவான 'டேபிள்டாப்' வகை ஓடுபாதை. இதுபோன்ற விமான நிலையங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கோவைக்கு கொடுக்கப்படுவதில்லை.


'விபத்தை தவிர்த்திருக்கலாம்'


கோவையை சேர்ந்த தொழில்துறையினர் கூறிய தாவது:கோழிக்கோடு விமான நிலையத்தை விட பல வகைகளில் கோவை விமான நிலையத்தின் தரம் நன்றாக உள்ளது. அதனால் தான், 'வந்தே பாரத்' திட்டத்தில், மஸ்கட், புரூனே, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து மீட்பு விமானங்கள் கோவை வந்தன. இப்போது, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள தரத்துக்கே துபாய், ஓமன், மஸ்கட், மலேசியா, அபுதாபி, தாய்லாந்து போன்ற இடங்களுக்கு விமான சேவைகள் வழங்கலாம்.

கோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானம், இரண்டு முறை வானில் வட்டமடித்து இறங்க முயன்றுள்ளது. இந்த நேரத்துக்கு, அந்த விமானம் கோவைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம். அங்கிருந்து கோவை வர, 15 நிமிடங்களே தேவைப்பட்டிருக்கும். ஒருவேளை, இதை செய்திருந்தால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். தற்போது கோழிக்கோடு விமான நிலையத்தில், 'போயிங்', ஏர்பஸ் ஏ320 விமானங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன. இனியாவது, தொழில் வளர்ச்சி, கார்கோ சேவைகளை கருத்தில் கொண்டு கோவை போன்ற விமான நிலையத்தை முழு அளவில் பயன்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


புறக்கணிப்பு அரசியல் ஏன்?


கோவை விமான நிலையத்தின் தரம் உயர்ந்தால், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், பாலக்காடு போன்ற மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் அதிகளவு பயனடைவர். கோவை புறக்கணிக்கப்படுவதால், 154 கி.மீ., துாரத்தில் உள்ள கொச்சி விமானநிலையத்துக்கு பலன் கிடைக்கும். கோவையில் இருந்து, 500 கி.மீ.,துாரத்திலுள்ள சென்னை, 350 கி.மீ., துாரத்தில் உள்ள பெங்களூரூ, 200 கி.மீ., துாரத்திலுள்ள திருச்சிக்கு செல்வதை காட்டிலும், கொச்சிக்கு தான் செல்ல வேண்டும். இந்த 'அரசியலை' வைத்துதான், இப்போது வரை கோவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளனர். இங்குள்ள அரசியல் கட்சியினரும் அழுத்தம் கொடுப்பதில்லை.


கண்ணுாருக்கு முக்கியத்துவம்


நம் நாட்டின் விமான சேவைக்காக பிற நாடுகளுடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம் (BASA) போடப்படும். இதன்படி இரு நாடுகளிடையே இயக்கப்படும் விமானங்கள், தரையிறங்க அனுமதிக்கப்படும் விமான நிலையங்கள், பயணிகள் பரிமாற்றம் குறித்து ஒப்பந்தம் செய்யப்படும். இந்த ஒப்பந்தத்தில், கடந்த ஓராண்டுக்கு முன் திறக்கப்பட்ட கேரளா, கண்ணுார் விமானநிலையத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து தேவையான வசதிகளை செய்துள்ளனர். கோவையை இப்போது வரை புறக்கணித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
12-ஆக-202013:09:55 IST Report Abuse
Tamilnesan விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை கோவை விமான நிலையத்தில் இறக்க ஏர் டிராபிக் கண்ட்ரோல் ரூம் அனுமதி கொடுத்திருக்க வேண்டும். இந்த விமான விபத்தை கொலை குற்றமாக வழக்கு பதிவு செய்து, கோழிக்கோடு விமான நிலைய அதிகாரிகளை நிரந்தர பனி நீக்கம் செய்து, அவர்கள் பென்சன், ப்ரொவிடென்ட் பண்ட் பணத்தை அரசாங்க கஜானாவில் சேர்க்க வேண்டும். இந்த தண்டனை மற்ற அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். ஆனால், இவற்றை இந்தியாவில் செய்ய மாட்டார்கள் என்பது தான் ஒரு கசப்பான உண்மை. இங்கு குற்றங்களுக்கு தண்டனை கிடையாது என்கிற நடைமுறை உள்ளது.
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
12-ஆக-202010:04:39 IST Report Abuse
Hari உண்மை வழக்கம்போல அந்தமானுக்கு ரயில் விடுவதாக இருந்தாலும் அது கேரளாவாளியாகத்தான் போகணும் என மலையாளி முடிவு எடுப்பான்,ஏனெனில் மத்திய அரசில் உள்ள அணைத்து அதிகாரிகளும் என்பது விழுக்காடு மலையாளிகள் ,தமிழன் தமிழ் மட்டும் படித்து தமிழ்நாட்டிற்குள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டத்தான் லாயக்கு.
Rate this:
Cancel
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஆக-202021:49:15 IST Report Abuse
Venkat தேவையில்லாதவற்றிக்கு போராட்டம் நடத்தும் 38MPகளை கொண்டு மார்த்தட்டும் தீயமுக கட்சியினர் இந்த பிரச்சினையை ஏன் எழுப்ப முன் வரவில்லை. ஆதாயம் இல்லாமல் இருக்குமோ?
Rate this:
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
16-ஆக-202012:24:41 IST Report Abuse
R KUMARநாங்கள் கேரளாவில், அதிகமாக முதலீடுகளை செய்துள்ளதால், தமிழ் நாட்டைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை. எப்படியிருந்தாலும், இந்த ... எங்களுக்கு வாக்குகள் அளிக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X