11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர்

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Jharkhand, Education Minister, Jharkhand HRD minister,  ஜார்கண்ட், கல்வி அமைச்சர், 11ம்_வகுப்பு, விண்ணப்பம்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மாதோ, தற்போது 11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பலரின் விமர்சனங்களே தன்னை கல்வி பயில ஊக்கமளித்ததாகவும் கூறினார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த ஜகர்நாத் மாதோ, அம்மாநில மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். 53 வயதாகும் இவர், 10ம் வகுப்பு வரையே படித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தனது படிப்பை தொடர முடிவு செய்துள்ளார். ஆம், தற்போது 11ம் வகுப்பில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஒரு சிலர் தனது கல்வித் தகுதி குறித்து ஆக்ரோஷத்துடன் கேள்வி எழுப்பியதாக கூறிய ஜகர்நாத், இதுபோன்ற தொடர் விமர்சனங்கள் தன்னை கல்வி பயில ஊக்கமளித்ததாகவும் கூறினார்.


latest tamil news


இது குறித்து அவர் கூறியதாவது: கல்வித்துறையுடன் எனது கல்வியையும் சேர்த்து கவனிக்கப்போகிறேன். 11ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளேன். எனது விண்ணப்பம், விதிகளின் கீழ் வந்தால், கல்வியை தொடர அனுமதி கிடைக்கும். அதன்பிறகு அரசியலிலும் படிப்பிலும் சமநிலையை ஏற்படுத்துவது பற்றி சிந்திப்பேன். உயர்கல்வி பயில ஆசை இருக்கிறது, ஆனால் எனது முதல் இலக்கு பள்ளிப்படிப்பை முடிப்பது தான். அதன்பின்னரே பட்டதாரி ஆகுவது குறித்து நினைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள், 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வி தகுதியை மட்டும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
11-ஆக-202019:37:58 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்தமாதிரி காரியங்கள் அனைத்தும் இந்தியாவில் தான் நடக்கும். கேட்டால் ஐந்தாம் வகுப்பு படித்த காமராசர் முதல்வராக இருந்திருக்கவில்லையா என கேட்பர். அவர் கோடானு கோடியில் ஒருவர். அவருடன் எவரையும் கம்பேர் செய்ய முடியாது.
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
11-ஆக-202017:36:14 IST Report Abuse
S.P. Barucha அதனால் தான் சீன எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்படுகின்றனர்
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஆக-202013:55:24 IST Report Abuse
தமிழ்வேல் வேறு எந்த துறைக்கும் இவர் லாயக்கு இல்லையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X