பொது செய்தி

இந்தியா

கிருஷ்ண ஜெயந்தி: அறிந்து கொள்ள வேண்டிய ஸ்ரீகிருஷ்ணரின் அற்புதமான குணங்கள்

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை கிருஷ்ண ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்றும் அழைக்கின்றனர். இந்த வருட கிருஷ்ண ஜென்மாஷ்டமி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பை குறிப்பதே இந்த தினமாகும். இந்து மதத்தில் அதிகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்று. ஸ்ரீகிருஷ்ணரை பற்றி அனைவரும் அறிவோம். அவர், திருமாலின் அவதாரம். உலக நன்மைக்காக

புதுடில்லி: ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை கிருஷ்ண ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்றும் அழைக்கின்றனர். இந்த வருட கிருஷ்ண ஜென்மாஷ்டமி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பை குறிப்பதே இந்த தினமாகும். இந்து மதத்தில் அதிகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்று.latest tamil newsஸ்ரீகிருஷ்ணரை பற்றி அனைவரும் அறிவோம். அவர், திருமாலின் அவதாரம். உலக நன்மைக்காக குருஷேத்திர போரை நடத்தி அதில் நீதியின் பக்கம் நின்று பாண்டவர்களை வெற்றிபெற வைத்தார். கிருஷ்ணருடைய அருளும், புத்திக்கூர்மையும் இல்லையெனில் போரில் பாண்டவர்கள் நிச்சயம் வெற்றிபெற்றிருக்க முடியாது. அதுமட்டுமின்றி போரில் மனமுடைந்திருந்த அர்ஜுனனுக்கு அவர் கூறிய கீதஉபதேசமே பகவத்கீதை என்னும் அரிய நூலானது. அதனால்தான் அவரை கிருஷ்ண பரமாத்மா என்று நாம் அழைக்கிறோம்.

ஆனால், மகாபாரதம் முழுவதுமே பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் இடையே இருந்த பகை, திரவுபதியின் சபதம் மற்றும் பாண்டவர்கள் எவ்வாறு போரில் வெற்றியடைந்தார்கள் என்பது பற்றி மட்டுமே இருக்கும். கிருஷ்ணருடைய தனிப்பட்ட வாழ்க்கையும், அவருடைய மகிமைகளும் பெரிதாக பேசப்பட்டிருக்காது. கிருஷ்ண லீலையில் கூட அவரின் குழந்தை பருவம் பற்றிய குறிப்புகள் மட்டுமே இருக்கும். எனவே இங்கு கிருஷ்ண பரமாத்மாவின் அற்புதமான குணங்கள் பற்றி பலரும் அறியாத செய்திகளை இங்கு பார்க்கலாம்.


latest tamil news
மகிழ்ச்சியின் கடவுள்


கிருஷ்ண பரமாத்மா குழந்தைப் பருவத்தில் மிகவும் விளையாட்டுத்தனமான, இனிமையான, மகிழ்ச்சியான மற்றும் அழகான தன்மைகளைக் கொண்டிருந்தார். இதனால், குழந்தைகள் விரும்பும் சிறந்த கடவுள்களில் ஒருவராக மாறினார். மேலும், அவரது வாழ்வில் பல பிரச்சினைகள் இருந்தபோதிலும், வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாகவே அவர் பார்த்தார். அதனால் வாழ்வு வண்ணமயமாக மாறும் என்பதை அவர் கற்றுத் தருகிறார். இதனால் பகவான் கிருஷ்ணர் மகிழ்ச்சியினர் கடவுளாகிறார்.latest tamil news
சிறந்த தலைவர்


கிருஷ்ணர் எல்லா காலத்திலும் நெருக்கடியில் கூட மிகப் பெரிய திட்டமிடுபவராக இருந்தார். அவர் சூழ்நிலைக்கு ஏற்பவும், கையாள வேண்டிய நபர்களுக்கு ஏற்பவும் வெவ்வேறு தலைமைத்துவ பாணிகளை பின்பற்றுகிறார். இதனால் தான் அவரால், 1.53 மில்லியன் போர்வீரர்களைக் கொண்ட பாண்டவர்களின் ராணுவத்தை கட்டுப்படுத்த முடிந்தது.


மிகச் சிறந்த குரு


ஓர் ஆசிரியராக, பகவான் கிருஷ்ணர் யோகா, பக்தி, மற்றும் வேதங்களின் உயர்ந்த உண்மைகளை அர்ஜுனனுக்கு கற்பித்தார். இதன் மூலம், கிருஷ்ணர் தன்னை அனைத்து குருக்களுக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் குரு என்பதை நிரூபிக்கிறார்.
குருக்ஷேத்ரா போர்க்களத்தில் 18க்கும் மேற்பட்ட ஆலோசனை அமர்வுகளில் 574 கேள்விகளுக்கு அவர் பொறுமையாக பதிலளிப்பார். மேலும், அர்ஜுனனுக்கு கற்பிக்கும் முன், அவரது சந்தேகங்கள், குழப்பங்கள் மற்றும் உணர்ச்சிகரமான முடிவுகளையும் கேள்விகளையும் வெளிப்படுத்த அனுமதிக்கிறார். இதுவே ஒரு மிகச் சிறந்த குருவுக்கான மிகப் பெரிய குணம்.


latest tamil news


Advertisementஒரு சிறந்த நண்பர்


புராணங்களைக் கொண்டாடும் இந்து உலகில், சுதாமா - கிருஷ்ணரின் கதைக்கு பெரும் மதிப்பு உண்டு. சுதாமா அன்பான நண்பர் மட்டுமல்ல கிருஷ்ணரின் சிறந்த பக்தரும் கூட. சுதாமாவுக்கு காட்டிய முழு மனத்தாழ்மையே காரணமாக, பகவான் கிருஷ்ணர் சிறந்த நண்பராக உருவெடுத்தார்.
சிறுவயது நண்பர்களை காலம் பிரித்தது. சுதாமா பல காலம் கழித்து கிருஷ்ணரின் அரண்மனைக்கு வந்த போது வாயில்களை நோக்கி கிருஷ்ணர் ஓடினார். சுதாமா கொண்டு வந்த எளிய பரிசு கிருஷ்ணருக்கு எல்லாவற்றையும் விட விரும்பத்தக்கதானது. மேலும், திரவுபதியின் கவுரவத்தை கவுரவர்களிடமிருந்து காக்க, அவர் எல்லோருக்கும் தேவைப்படும் நண்பராக மாறினார்.


latest tamil news
குறும்புக்கார குழந்தை


குழந்தையாக இருந்தபோது வெண்ணெயை மிகவும் விரும்பினார். எங்கு கண்டாலும் அதை சாப்பிட்டார். யார் வைத்திருந்தாலும் அதை எடுத்துக்கொள்வார். குழந்தையாக மிகவும் குறும்புக்காரராக இருந்தார். மேலும், கோபிகளின் ஆடைகளை குறும்புத்தனமாக மறைப்பார் என்றும் நம்பப்படுகிறது. இது தெய்வீக அன்பின் ஓர் எடுத்துக்காட்டு. மேலும் அனைவரையும் நம்முடையவர்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை இதன் மூலம் உணர்த்தினார்.


ஒரு சிறந்த மாணவர்


ஒரு சிறந்த ஆசிரியர் முன்னதாக ஒரு சிறந்த மாணவராக இருக்க வேண்டும். கிருஷ்ணரும் பலராமரும் 64 நாட்களில் 64 அறிவியல் மற்றும் கலைகளில் தேர்ச்சி பெற்றனர். அவர்களது குரு, சூரியனுக்கும் சந்திரனுக்கும் பயிற்றுவிப்பதாக கருதினார். மேலும், ஒரு புராணக்கதையில், கிருஷ்ணர் தனது குருவின் விருப்பங்களை நிறைவேற்ற எமலோகாம் வரை பயணம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news
எளிமையின் அடையாளம்


பகவான் கிருஷ்ணர் குறிக்கும் முக்கிய குணம் அவரது எளிமை. அவர் பிருந்தாவனத்திற்குச் செல்லும் முன், வட இந்தியாவில் ஒரு மாடு மேய்ப்பவர்களின் கிராமமான கோகுலத்தில் கழித்தார்.
அங்கு அவர் சாதாரண மனிதர்களிடம் உறவையும் அன்பின் பிணைப்புகளையும் உருவாக்கினார். அவர் ஏழை பிராமணரான சுதாமாவுடன் நண்பராக இருந்தார். அவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மிக எளிதாக எடுத்துக்கொண்டார். மிகப் பெரிய பிரச்சினைகளையும், மிகப் பெரிய போரையும் கூட எளிமையாக தீர்த்தார்.


latest tamil news
அறிவின் பெருங்கடல்


பகவான் கிருஷ்ணர் உண்மையில் பூமியில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கற்றுத்தந்த சிறந்த குரு. உயர்ந்த அறிவின் உன்னதமான பகுதியைப் புரிந்துகொள்ள, அவரது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் தேட முயற்சிக்கும் அனைத்து அறிவையும் கொடுக்கும் ஒரே நூல் பகவத் கீதை.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
11-ஆக-202019:43:17 IST Report Abuse
Madhusoodhana Ramachandran நம் இந்து மதத்தின் மஃஹிமையை அங்கேளேயர்களும் அனுபவித்திருக்கிறார்கள்.ஒரு சமயம் மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்லளவையும் எட்டிவிட்டது அச்சமயம் இரவு மழை விடாமல் பெய்து கொண்டிருந்தனது அச்சமயம் கலெக்டர் அந்த ஏரியின் கரையில் நடந்து பார்த்து கொண்டிருந்தார். அச்சமயம் கலெக்டரின் டவாலி அவரிடம் ஏரிக்கரையில் இருக்கும் ஸ்ரீ ராமரரிடம் வேண்டிக்கொண்டால் அவர் காப்பர் என்றார். கலெக்டருக்கு நம்பிக்கை இல்லை இருந்தும் ஊரை காக்க அப்படி நடந்தால் நான் உங்கள் கதவின் மேல நம்பிக்கை கொள்கிறேன் என்றார். அப்போது இருட்டில் ஊர் மின்னல் தோன்ற அதில் ஒரு மனிதன் கையில் வில்லோடு நிற்பதையும் பக்கத்தில் இனொரு மனிதனும் கையில் வில்லோடு நிற்பதையும் பார்த்தாக கூறினார். உடேனே டவாலி அது அந்த ஏரிக்கரையில் உள்ள ராமர் தான் என்றார். கோவிலிலும் சென்று பார்த்தார் அவர் பார்த்த அதே உருவம் என்றார். அவரை வேண்டி கொள்வதாக ஏரிக்கரைல் மண்டியிட்டு பிரார்த்தனை செய்ய மழை நின்றது.. அவர் கோவிலுக்கு தேவையானதை செய்தார். இதே போலெ Rabart clive விற்கும் சமயபுரத்தில் ஸ்ரீ பெரும்புதூரிலும் நம்தேய்வத்தின் மேலும் நம்பிக்கை ஏற்பட்ட அனுபவங்கள் உண்டு.
Rate this:
Cancel
Shankar - Mangaf,குவைத்
11-ஆக-202019:40:32 IST Report Abuse
Shankar ஜெய் ஸ்ரீகிருஷ்ணா கிருஷ்ணா.... ஓம் நமோ நாராயணா..... காண்பதெல்லாம் கண்ணன் நிற்பதெல்லாம் கண்ணன் அசைவதெல்லாம் கண்ணன் உணர்வெதெல்லாம் கண்ணன் இன்பமெல்லாம் கண்ணன் துன்பமெல்லாம் கண்ணன் அறியாதத்தெல்லாம் கண்ணன் ஜயதேவர் தனது கீதாகோவிந்த அஸ்தபதியில் பாடிய அனைத்துமே நம்மை ஸ்ரீகிருஷ்ண காலத்துக்குகே அழைத்து செல்லும். சங்கீத கலாநிதி வேதவல்லி அம்மா மிகவும் நன்றாக பாடியுள்ளார். "ச்ரித்த கமலா குச்ச மண்டன " கீர்த்தனத்தை கண்மூடி கேட்கும்போது எம்பெருமான் ஐயா பாதத்தில் மிதப்பது போல் உணர்வேன்.... அநித்யமான பூமிக்கு வந்த என்னை கண்ணன் திரும்பி கூப்பிடும்போது வேதனையில்லாத மரணத்தை தந்து என்னை கடைந்தேற செய்வான் என் ஸ்ரீ மாயகண்ண்நாராயணவிஷ்ணு. ஓம் நமோ நாராயணா.... இந்த உணது அவதாரத்தினத்தில் பக்தர்களான அனைவரும் நமஸ்கரிக்கிறோம். ஓம் நமோ நாராயணா...
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
11-ஆக-202017:22:50 IST Report Abuse
blocked user ஶ்ரீநாம சங்கீத்தனம் மூலம் பகவானது தரிசனமே கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X