பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் இறந்தோரின் பாதி எரிந்த உடல்களை உண்ணும் நாய்கள்: தெலுங்கானாவில் அவலம்

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் அதிலாபாத்தில் இறப்புக்குப் பிறகும் கூட கொரோனா நோயாளிகளுக்கு உரிய கவுரவம் கிடைப்பதில்லை. இறந்த கொரோனா நோயாளிகளின் பாதி எரிந்த உடல்களை நாய்கள் தின்னும் புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.latest tamil news
அதிலாபாத்தில் மவாலா கிராமத்தில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட இடுகாட்டில் கொரோவாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றன.
'கொரோனாவினால் இறந்த ஒருவரின் உடலை எரிக்க 5 முதல் 6 குவிண்டால் விறகு தேவைப்படும். ஆனால் தெலங்கானாவில் மாநகராட்சி அலுவலர்கள் 3 குவிண்டால்தான் அளிக்கின்றனர். இதோடு மட்டுமல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள், பாதி எரிந்த நிலையில் உள்ள உடல்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்கின்றனர். அந்த உடல் பாகங்கள் தெருநாய்களுக்கு இரையாகின்றன' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


latest tamil newsஅதிலாபாத் மவாலா கிராம மக்கள் கூறுகையில், 'உடலுக்குத் தீ வைத்தவுடன் உறவினர்களும், ஊழியர்களும் இடுகாட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். உடல் முழுவதும் எரிகிறதா என்பதைக் கண்காணிக்க யாரும் அங்கு இருப்பதில்லை' என்றனர்.
இதுகுறித்து அதிலாபாத் நகராட்சி உதவி ஆணையர் கூறுகையில், 'அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதே இடத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் 7 உடல்கள் தான் எரிக்கப்பட்டுள்ளன' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
11-ஆக-202019:31:22 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த நாய்களினால் (ரேபிஸ் போல) தொற்று பரவாமல் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
11-ஆக-202016:45:45 IST Report Abuse
 Muruga Vel கம்பிகளால் மூடப்பட்ட கிணறு வடிவத்தில் இருக்கும் மேடையில் பார்சி சமுதாய மக்கள் இறந்த உடலை கிடத்தி தயிரை உடலில் தெளித்திருப்பார்கள் ..வானத்தில் பறக்கும் கழுகு போன்ற பிராணிகள் உடலில் இருந்து சதையை தின்று விட்டு எலும்புகள் கம்பிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியிலிருந்து கிணற்றுக்குள் விழுந்து விடும் ...நேபாளில் இறந்த உடலை பறவைகளுக்காக விட்டுவிட்டு வரும் வழக்கம் உண்டு ..கங்கையில் பாதி எரிந்த உடலை தள்ளி விடும் வழக்கம் உண்டு ..
Rate this:
Cancel
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
11-ஆக-202014:25:08 IST Report Abuse
Subramaniyam Veeranathan இத்தனை நாட்கள் உசிரோடு இருப்பவர் கையில் இருப்பதை கொள்ளையடித்தனர். இந்த கொரன வந்தபின் செத்தவர்களையும் அவர்களின் உறவினர்களையும் சேர்த்து கொள்ளை அடிக்கின்றனர். பாவிகள் எப்போதும் திருந்தமாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X