பொது செய்தி

இந்தியா

ராமர் கோயிலுக்காக இஸ்லாமியர் வடிவமைக்கும் 2,100கி மணி; 15கிமீ வரை ஒலி கேட்கும்

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Ram Temple, Bell, Muslim, Hindu, Artisans, 2.1Tonne, BrassBell, ராமர் கோயில், மணி, முஸ்லிம், இஸ்லாமியர், வடிவமைப்பு, 2100கிலோ, ஒலி

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயிலுக்காக தவு தயால் மற்றும் இஸ்லாமியரான இக்பால் மிஸ்த்ரி என்பவர்கள் 2,100 கிலோ எடையுள்ள மணியை வடிவமைத்துள்ளனர். இதன் ஒலி, 15 கி.மீ வரை கேட்கக்கூடியது எனக் கூறப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஜலேசர் மாவட்டத்தைச் சேர்ந்த தவு தயால், தனது குழுவினருடன் சேர்ந்து 30 ஆண்டுகளாக வெவ்வேறு வடிவத்தில் கோவில் மணிகளை செய்யும் தொழிலை செய்துவருகிறார். தவு தயாலின் நண்பரும், சக கலைஞருமான இக்பால் மிஸ்த்ரி தான், அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்கு பிறகு அதிகமாக பேசப்படுபவர். ஆம், இஸ்லாமியரான இவர், ராமர் கோயிலுக்காக 2.1 டன் (2100 கிலோ) எடையுள்ள மணியை வடிவமைத்துள்ளார். இந்த மணியின் ஓசை 15 கி.மீ தொலைவு வரை கேட்கும் என கூறப்படுகிறது.


latest tamil news


தவு தயால், இக்பால் மிஸ்திரி இருவரும் இணைந்து இவ்வளவு எடைகொண்ட பெரிய மணியை தயார் செய்தது இதுவே முதன்முறையாகும். இது குறித்து 50 வயதான தவு தயால் கூறுகையில், ‛இவ்வளவு பெரிய அளவிலான ஒரு மணியில் நீங்கள் பணிபுரியும் போது, ​​சிரமத்தின் அளவும் பல மடங்கு அதிகரிக்கும். பல மாதங்கள் நீடிக்கும் இந்த செயல்பாட்டில் சிறு தவறு நிகழாமல் இருப்பது மிகவும் கடினம். இதை ராமர் கோயிலுக்காக உருவாக்குகிறோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனாலும், தவறிழைக்க கூடாது என்ற பயமும் எங்கள் மனதில் இருந்தது.' இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


இக்பால் மிஸ்த்ரி கூறியதாவது: மணி செய்வதில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், உருக்கிய உலோகத்தை ஊற்றுவதில் 5 விநாடி தாமதம் நிகழ்ந்தாலும் முழு வேலையும் வீணாக போய்விடும் அபாயம் இந்த வேலையில் இருக்கிறது. உருவாக்குவதில் எங்களுக்கு நம்பிக்கையிருந்தாலும், ஒரு விதமான பதற்றமும் இருந்தது. இப்போது இது சிறந்த முறையில் உருவாகியுள்ளது. இந்த மணியின் ஒலி 15 கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்கக்கூடியது. இது தனித்தனியான பாகங்களைக் கொண்டு பொருத்தப்படவில்லை. மொத்தமாக உலோகக் கலவையால் ஒரே பொருளாக உருவாக்கப்பட்டது என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட், டின், இரும்பு மற்றும் பாதரசம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
11-ஆக-202017:56:08 IST Report Abuse
Rajagopal இதே போல பல மசூதிகள், முஸ்லிம் அல்லாதவர்களால் கட்டப்பட்டவை. இந்தியாவை ஆக்கிரமித்துக் கொண்ட பல சுல்தான்கள், இந்து கோயில்களை இடித்து, அவற்றிலிருக்கும் தூண்களையும், மண்டபங்களையும் வைத்து மசூதி கட்டிக்கொண்டார்கள். தலை போகாமல் பிழைத்தவர்களில் கட்டிடம் கட்டுபவர்களும், சிற்பிகளும் இருந்தார்கள். அவர்கள் கட்டி இன்று வரை நிற்பவைதான் இந்த மசூதிகள் - குதுப் மினாரிலிருந்து தொடங்கி.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
11-ஆக-202017:26:03 IST Report Abuse
Vijay D Ratnam எதோ கோவில் மணி என்று நினைக்கிறோம், அதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா. 2100 கிலோ எடையில் தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட், டின், இரும்பு மற்றும் பாதரசம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நினைக்கும் போதே ஆச்சர்யமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒலிக்கப்போகும் கோவில்மணியை உருவாக்குபவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
11-ஆக-202016:36:28 IST Report Abuse
 Muruga Vel கோவில் மணி என்றால் சிதம்பரம் நடராஜர் கோவில் மணி தான் பிரதானம் ..பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது ...அயோத்திய கோவிலுக்கு செய்யப்படும் மணி இந்து மற்றும் முஸ்லிம்கள் இனைந்து உருவாக்கியது ...காலம் காலமாக விஜய தசமியில் எரிக்கப்படும் ராவணன் உருவ பொம்மை டில்லி மற்றும் நாக்பூர் போன்ற நகரங்களில் இஸ்லாமியர்களால் தயாரிக்கப்படுகிறது ..காஷ்மீரில் கீர்பவானி மற்றும் அமர்நாத் கோவில்களில் பிரசாதம் விற்பவர்கள் இஸ்லாமியர்கள் ..வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு அருகில் கடைகள் வைத்திருப்பதும் இஸ்லாமியர்கள் ...அரசியல் வாதிகளும் உலமாக்களும் கருத்து வேறுபாடு உருவாக்குகிறார்கள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X