தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்த அமெரிக்க வழக்கறிஞர்களுக்கு சீனா அபராதம்| Dinamalar

தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்த அமெரிக்க வழக்கறிஞர்களுக்கு சீனா அபராதம்

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (6)
Share
China, Sanctions, US_Officials, HongKong, RelatedIssues, சீனா, தேசிய பாதுகாப்புச் சட்டம், அமெரிக்கா, வழக்கறிஞர்கள், அபராதம்

பெய்ஜிங்: சீன-அமெரிக்க போர் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஹாங்காங்கில் முன்னதாக சீனா தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. இதனை அடுத்து ஹாங்காங்கின் தனி சட்டங்களையும் உரிமைகளையும் சீனா பறித்தது. தற்போது ஹாங்காங் முழுமையாக சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடும் ஜனநாயகவாதிகள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஹாங்காங் சீனாவால் கையகப்படுத்தப்பட்டதை அடுத்து, அமெரிக்கா ஹாங்காங்கை தங்களது நட்பு நாடுகள் வர்த்தக அந்தஸ்தில் இருந்து நீக்கியது. பின்னர் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள எதிர் நாட்டுத் தூதரகங்களை மூட உத்தரவிட்டன. இவ்வாறாக கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து அமெரிக்கா, சீனா மோதல் வலுவடைந்து வருகிறது. ஹாங்காங்கை கையகப்படுத்தும் சீனாவின் செயலுக்கு வேறு சில நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது சீனாவில் வசிக்கும் அமெரிக்க வழக்கறிஞர்கள் 6 பேர் ஹாங்காங்கை சீனா கையகப்படுத்துவதை எதிர்த்துள்ளனர்.


latest tamil news


இந்த 6 வழக்கறிஞர்கள் உட்பட மொத்தம் 11 சீன வாழ் அமெரிக்கர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக தற்போது சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் தற்போது சீனாவின் விசாரணை வட்டத்துக்குள் உள்ளனர். இது அமெரிக்காவை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

புளோரிடாவைச் சேர்ந்த சென்ஸ் மார்கோ, டெக்ஸாசைச் சேர்ந்த க்ரக்ஸ், ஆர்கன்ஸாஸைச் சேர்ந்த டாம் காட்டன், மிசவுரியைச் சேர்ந்த ஜாஷ் ஹாலே, பென்சில்வேனியாவைச் சேர்ந்த பாட் டூமே, நியூ ஜெர்சியைச் சேர்ந்த கிரிஸ் ஸ்மித் ஆகிய அமெரிக்க வழக்கறிஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X