பதவி மீது ஆசையில்லை: சச்சின் பைலட்

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
சச்சின் பைலட், அசோக் கெலாட், காங்கிரஸ், ராஜஸ்தான், sachin pilot

புதுடில்லி: பதவி மீது ஆசையில்லை எனவும், மக்கள் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் பணியாற்ற வேண்டும் என, ராஜஸ்தானில், முதல்வர் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட், தனக்கு முதல்வர் பதவி கிடைக்காததால், கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேருடன் இணைந்து, தனி அணியாக செயல்பட்டு வருகிறார். கட்சியின் மேலிட தலைவர்கள் மேற்கொண்ட சமரச முயற்சி தோல்வி அடைந்தது. காங்கிரஸ், எம்.எல்.ஏ.,,க்கள் கூட்டத்தில் பங்கேற்காததால், சச்சின் பைலட்டிடமிருந்து, துணை முதல்வர் பதவியும், மாநில தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.இதனால், கெலாட் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக, பா.ஜ., வினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள சச்சின் பைலட், நேற்று, காங்கிரஸ் எம்.பி., ராகுல், அவரது சகோதரியும், காங்., பொதுச் செயலருமான பிரியங்கா ஆகியோரை, டில்லியில் சந்தித்து பேசினார்.


விமர்சனம் செய்யவில்லைஇது தொடர்பாக சச்சின் பைலட் கூறியதாவது: பதவி மீது எனக்கு ஆசையில்லை. அது இன்று வரும் நாளை போகும். மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும். எங்களது குடும்பத்தில் சில கோரிக்கைகளை தான் முன் வைத்தேன். அதற்காக, எதிர்ப்பை காட்டியது பற்றி கவலைப்பட தேவையில்லை. யாரையும் விமர்சனம் செய்யவில்லை. அசோக் கெலாட் எனது சகோதரரை போன்றவர். தனிப்பட்ட முறையில் அவரை மதிக்கிறேன். அதேநேரத்தில் பணி குறித்த பிரச்னைகளை எழுப்ப எனக்கு உரிமை உள்ளது.


மிரட்டவில்லை


latest tamil newsநான் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய பிரச்னைகளை தீர்ப்பதற்காக காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகள் முக்கியமானவை. அதில் மிரட்டவோ அல்லது அரசியலில் தனி நபர் விரோதமா இல்லை. ராகுல், பிரியங்காவை சந்தித்த போது, எங்களது பிரச்னையை கவனமாக கேட்டனர். அதனை தீர்ப்பதற்கான திட்டம் வகுக்கப்படும் என தெரிவித்தனர்.


பா.ஜ., முயற்சி தோல்வி


latest tamil news


முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், காங்கிரசில் அமைதி மற்றும் சகோதரத்துவம் திகழ்கிறது. பிரச்னையை தீர்ப்பதற்காக 3 பேர் கொண்ட குழுவை கட்சி மேலிடம் அமைத்துள்ளது. ஆட்சியை கவிழ்க்க பா.ஜ., முயற்சி செய்தது. ஆனால், எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் ஒற்றுமையாக உள்ளனர். யாரும் எங்களை விட்டு செல்லவில்லை. வருமான வரித்துறை மற்றும் சிபிஐ தவறாக கையாளப்படுகிறது. மதத்தின் பெயரில் அரசியல் நடக்கிறது. எங்களது அரசு 5 ஆண்டுகள் நீடிப்பதுடன், அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
11-ஆக-202019:57:39 IST Report Abuse
vbs manian பாதி கிணறு தாண்டி விழுந்து விட்டார்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
11-ஆக-202019:53:51 IST Report Abuse
mathimandhiri இந்த சமரசத்தில் மத்தயஸ்த்தம் செய்ததில் தேசாபிமான காஷ்மீர் கட்சிக்குத் தொடர்பில்லை என்கிறீர்களா ?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஆக-202019:28:39 IST Report Abuse
Bhaskaran கெலோட் விட்டு கொடுக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X