பொது செய்தி

இந்தியா

யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement

லக்னோ: உத்திரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் 3 ஆண்டு ஆட்சியில் சுமார் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டிருப்பதாக் காங்கிரஸ் புகார் எழுப்பியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடைபெற்றது முதல், உ.பி.,யில் பிராமண சமூகத்தின் வாக்கு வங்கியை மையமிட்டு அரசியல் அதிகரித்துள்ளது. பிராமண சமூக வாக்குகளைப் பெற, ராமருக்கு ஈடாக பரசுராமரை எதிர்கட்சிகள் தூக்கிப் பிடிக்கத் துவங்கியுள்ளன. தற்போது காங்கிரஸும் பரசுராமர் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. 2007ல் நிலவிய சமாஜ்வாதி ஆட்சியில் பரசுராமர் ஜெயந்திக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதை பா.ஜ.க., ஆட்சிக்கும் வந்தவுடன் ரத்து செய்ததாகவும் அதை மீண்டும் அறிவிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதை வலியுறுத்தி, காங்., புதிதாக அமைத்த 'பிராமின் சேத்னா சமிதி' எனும் அமைப்பின் தலைவரான ஜிதின் பிரசாத், முதல்வர் யோகிக்கு கடிதம் எழுதியுள்ளார்.



latest tamil news




இந்நிலையில், காங்., செய்தி தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி, 'பரசுராமர், சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களுக்கும், பிராமணர்களுக்கும் முக்கியக் கடவுளாக உள்ளார். உ.பி.,ல் முதல்வர் யோகி ஆட்சியில் கடந்த 3 வருடங்களில் சுமார் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரசு ஆதரவில்லாமல் இது சாத்தியமா? பிராமணக் குடும்பங்கள் உயிருடன் எரிக்கப்பட்டபோது சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சிகளும் எங்கிருந்தன?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


latest tamil news



'உ.பி.,யில் பிராமண சமூக வாக்குகள் 12 சதவிகிதம் உள்ளன. பல ஆண்டுகளாகக் காங்கிரசிடம் இருந்த பிராமண சமூக வாக்குகள் ராமர் கோவில் வாக்குறுதியால் பா.ஜ.க., பக்கம் சாயத் துவங்கியுள்ளன. தலீத் சமூகத் தலைவரான மாயாவதி, பிராமணர்களையும் தாக்கூர் சமூகத்தினருடன் ஒன்றிணைத்து ஒரு சமூகப் புரட்சிக்கு முயன்றார். இதனால், அவரது பகுஜன் சமாஜ் கட்சி, 2007 தேர்தலில் தனிமெஜாரிட்டியில் ஆட்சி அமைத்தது. 2014 மக்களவைக்கு பிரதமராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டு வீசிய அலையால் மீண்டும் பா.ஜ., வசம் பிராமணர் வாக்குகள் சென்றன. இது, ராமர் கோவில் பூமி பூஜையால் அக்கட்சிக்கு வரும் தேர்தலிலும் வாக்களிக்கும் சூழல் நிலவுகிறது. இதை தடுத்து பிராமண சமூகத்தினரை தம் பக்கம் இழுக்க சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயல்கின்றன. இதற்காக, பிராமணர்களுக்கு ஆதரவான பிரச்சனைகளை எழுப்பி அரசியல் செய்யத் துவங்கி உள்ளன' என, அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
11-ஆக-202020:32:47 IST Report Abuse
RajanRajan காஸ்மீரி பண்டிட் வம்சமே காஸ்மீரில் இருந்து துரத்தியடிக்க பட்டதை காங்கிரஸ் நினைவுகூர வேண்டும்.
Rate this:
Cancel
11-ஆக-202020:05:29 IST Report Abuse
theruvasagan என்னடா இது கான்கிராசுக்கு வந்த சோதனை. யோகி அரசு சிறுபான்மையினரை சிதைக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களை நசுக்குகிறது பிற்பட்டவர்களை அமுக்குகிறது என்று அழுது புரண்டதெல்லாம் ஒர்க் அவுட் ஆவலையா. இப்ப திடீர்ன்னு பிராமணர்கள் மேல் கரிசனம் பொங்குது. அப்டீன்னா நான் கவுல் பிராமணன்னு கதறரது. சட்டைக்கு மேல பூணுல போட்டுக்கிறது எல்லா டிராமாவும் கொரனா டைம்ல பழைய டிவி சீரியல்கள் மாதிரி மறு ஔிபரப்பா. தாங்கமுடியாதுடா சாமி.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஆக-202019:18:36 IST Report Abuse
Bhaskaran தமிழ்நாட்டில் பிராமணர்கள் பத்து விழுக்காடு இருந்தால் திராவிட கட்சிகள் ... வாக்கு வாங்க வந்திருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X