பொது செய்தி

இந்தியா

சரியான திசையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: மோடி

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பிரதமர்மோடி, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, corona india, Pm Modi, narendra modi, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, coronavirus count, corona toll, corona India, india fights corona

புதுடில்லி: இறப்பு குறைந்து, குணமடைவோர் அதிகரிப்பது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியான திசையில் செல்வதை காட்டுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நோய் பரவல் அதிகம் உள்ள,தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டில்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் மாநில முதல்வர்களுடன், இன்று(ஆக., 11) காலை பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்தினார்.


latest tamil news



அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: இறப்பு குறைந்து, குணமடைவோர் அதிகரிப்பது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். சுகாதார பணியாளர்கள், ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். கொரோனா பரவல் நேரம் ஒடிக்கொண்டிருக்கிறது. புதிய சூழலும் உருவாகிறது.


latest tamil news


கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களின் பங்கு இன்றியமையாதது. ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகம் பாதித்த மாநிலங்கள், பேசும் போது, தடுப்பு பணிகள் வலுவடையும். நம்பிக்கை அதிகரித்து அச்சம் குறைகிறது. பாதிப்பு குறைவதுநம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
11-ஆக-202016:56:15 IST Report Abuse
Indian  Ravichandran கோரண்னவோடு வாழ பழகிவிட்டோம் இந்தியா முழுதும் ஊரடங்கை உடனே அகற்றுங்கள். அரசு ஊழியர்கள் அரசியல் வாதிகளால் பொதுமக்கள் வதைக்கப்படுகிறார்கள், அரசு ஊழியருக்கு சம்பளபிரச்னை இல்லை நாங்கள் தினம் தினம் செத்து பிழைக்கிறோம் . போதும் ஊரடங்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X