காஷ்மீரில் 4ஜி தடை படிப்படியாக நீக்கப்படும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020
Share
Advertisement
4G Ban, J&K, restriction, 4G, ban, J&K districts, Centre, SC, காஷ்மீர், 4ஜி, தடை, படிப்படியாக நீக்கப்படும், சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு

புதுடில்லி: காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள 4ஜி இணைய சேவைக்கான தடையை ஆகஸ்ட் 16 முதல் படிப்படியாக நீக்க முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ல் நீக்கியது. இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் கலவரங்கள் ஏற்படாமல் இருக்க ஊரடங்கு, மொபைல் இணையதள சேவைக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மொபைல் இணைய வேகம் மட்டும் இன்னும் அதிகரிக்கப்படாமல் 2ஜி அளவிலேயே உள்ளது.


latest tamil news



இதன் காரணமாக கொரோனா தொற்றுநோய் குறித்த சமீபத்திய தகவல்கள், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை மருத்துவர்கள் மற்றும் பொது மக்கள் அணுக முடியவில்லை என்று கூறி தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த கோர்ட் மே 11-ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் இணைய வேகத்தை அதிகரிப்பது தொடர்பாக மத்திய மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றது.


latest tamil news



ஆனால் உயர்மட்டக் குழு எந்த கூட்டங்களையும் நடத்தவில்லை, எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என ஜூன் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அம்மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, 4ஜி சேவை அளிப்பதில் பிரச்னையில்லை ஆனால் இணைய வேகம் 2ஜி அளவில் இருக்கும் பொழுதே இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை இஸ்லாமாபாத் தொடர்கிறது என அரசு தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் 4ஜி சேவையை மீண்டும் வழங்குவதற்கான சாத்தியத்தை மத்திய அரசு ஆராயும்படி சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டது.

இன்று (ஆக., 11) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ஆகஸ்ட் 16 முதல் சோதனை அளவில் இரண்டு மாவட்டங்களில் முதலில் 4ஜி தடை நீக்கப்படும் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X