கொரோனோவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை பதிவு செய்ததாக ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Russia, Registers, Coronavirus Vaccine, COVID-19 in russia, Vladimir Putin, corona, coronavirus, covid-19, corona vaccine, புடின்,விளாதிமிர் புடின், கொரோனா, வைரஸ், தடுப்பு மருந்து, பதிவு, கோவிட்-19

மாஸ்கோ: ரஷ்யா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மனிதர்களுக்கு பரிசோதிக்கும் இறுதிக்கட்ட நிலையில் உள்ளன. ஆனால், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாகவும், அனைத்துக்கட்ட சோதனைகளும் வெற்றி அடைந்ததாகவும் ரஷ்யா தெரிவித்திருந்தது. மேலும், விரைவில் மருந்தை பதிவு செய்யவுள்ளதாகவும் கூறியிருந்தது. இந்நிலையில், தடுப்பு மருந்து குறித்து ரஷ்ய அமைச்சர்கள் மத்தியில் வீடியோ கான்பரென்சிங் மூலம் அந்நாட்டு அதிபர் புடின் பேசினார்.


latest tamil news



அவர் பேசியதாவது: உலகில் முதன்முறையாக, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கி இன்று காலை, பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது இரு மகள்களில் ஒருவர் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டார். தற்போது நலமாக உள்ளார். கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பரிசோதனையில் அவர் ஈடுபட்டார் என்று சொல்லலாம். இந்த புதிய தடுப்பு மருந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்ததும் மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
11-ஆக-202020:22:17 IST Report Abuse
Tamilnesan இந்த செய்தி இங்குள்ள கார்பொரேட் மருந்து கம்பனிகளுக்கு நிச்சயம் வயிற்றில் புளியை கரைத்திருக்கும். பீதியை கிளப்பிவிட்டு வித விதமாக ஆஸ்பத்திரியில் அப்பாவி மக்களிடம் பில் போட்டவர்கள் நிச்சயம் அதிர்ச்சியாகி இருப்பார்கள்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
11-ஆக-202019:49:57 IST Report Abuse
Tamilnesan நல் வாழ்த்துக்கள். ரஷ்யா விண்வெளி துறை மட்டுமல்ல, மருத்துவத்துறையிலும் முன்னணி நாடு என்பதை நிரூபித்துள்ளது. கொரநா தடுப்பூசி பந்தயத்தில் ரஷ்யா முதலிடம் வந்து தங்க பதக்கம் வாங்கியுள்ளது. மீண்டும் நல்வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X