பொது செய்தி

இந்தியா

கொரோனா மையத்தில் இளைஞர் உயிரிழப்பு; முதியவர் உடலை வழங்கியதால் அதிர்ச்சி

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

ரேவா: மத்திய பிரதேச மாநிலம் ரேவா நகரிலுள்ள அரசு கோரோனா மையத்தில் சிகிச்சையில் இருந்த 22 வயது இளைஞர் உயிரிழந்தார். அவரது உடலை எரியூட்டிவிட்டு, அவருக்கு பதிலாக, 65 வயது முதியவர் உடலை மருத்துவமனை தந்துள்ளது அம்பலமாகியுள்ளது.latest tamil news
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராம்விஷால் குஷ்வாஹா. இவரது 22 வயது மகனுக்கு ஆக., 3ம் தேதி கடுமையான உடல் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ரேவாவிலுள்ள சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையின் ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டார். பின், அதே மருத்துவமனையில் உள்ள கொரோனா மையத்திற்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு அவரது உடல்நிலை குறித்து குடும்பத்தினருக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. அவரது கொரோனா பரிசோதனை முடிவுகள் குறித்தும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தனது மகனின் நிலை குறித்து அறிய ராம்விஷால் குஷ்வாஹா போராடியுள்ளார். கடந்த 9ம் தேதி அவரது மகன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிணவறையில், தனது மகனின் பெயர் எழுதப்பட்ட பையை பெற்றுக்கொண்டு வந்து, திறந்து பார்த்த போது அதில் 65 வயது முதியவரின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


latest tamil newsஇது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்த போது, 'உரிமை கோராத உடல்களுடன் தங்கள் மகனின் உடலை உள்ளாட்சித் துறையினர் தகனம் செய்திருக்கலாம்' என, அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து பணியில் இருந்த டாக்டர் ராகேஷ் படேல் சஸ்பென்ட் செய்யபட்டுள்ளார். 'மகனின் இறப்புக்கான காரணமும் தெரியவில்லை; அவனது அஸ்தியும் கிடைக்கவில்லை' என, குடும்பத்தினர் புலம்பி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
11-ஆக-202020:13:55 IST Report Abuse
S. Narayanan இது ஆஸ்பித்திரியே அல்ல.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
11-ஆக-202019:35:36 IST Report Abuse
Krishnamurthy Venkatesan கொரோனா மரணத்தில் ஏன் வெளிப்படை தன்மை இல்லை? தப்பான காரியங்கள் நடைபெற பல சந்தர்ப்பங்கள் உள்ளன என்று சந்தேகம் வலுக்கிறது.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
11-ஆக-202016:56:39 IST Report Abuse
sundarsvpr மருத்துவர் ஏன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது புரியவில்லை.? மருத்துவ நிலையம் பொறுப்பு இல்லையா? அரசு மருத்தவ மனை என்பதால் நிர்வாக குளறுபடியா? சாவிற்கு காரணம் அறிந்து தவறு அரசின் நிர்வாகம் என்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X