பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.984 சரிவு : இருதினங்களில் ரூ.1,144 குறைந்தது

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Gold, silver, PRICE, GOLD RATE, தங்கம், வெள்ளி

சென்னை : தங்கம் விலை கடந்த இருதினங்களாக சரிந்து வருகிறது. இன்று (ஆக.,11) ஒரேநாளில் சவரன் ரூ.984ம், இருதினங்களில் ரூ.1,144யும் குறைந்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதன் காரணமாக தங்கம் -. வெள்ளி விலை வரலாறு காணாத விலை ஏற்றத்தை சந்தித்து வந்தது. சில தினங்களுக்கு முன் சவரன் ரூ.43 ஆயிரத்தை கடந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சற்று ஆறுதல் தரும் விதமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இன்று ஒரேநாளில் சவரன் ரூ.984 குறைந்ததோடு, இருதினங்களில் சவரன் ரூ.1,144 குறைந்துள்ளது.


latest tamil news




சென்னை தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஆக.,11) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.123 குறைந்து ரூ.5,242க்கும், சவரன் ரூ.984 குறைந்து ரூ.41,936க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.55,080க்கும் விற்பனையாகிறது.

அதேசமயம் வெள்ளியின் விலை காலையில் உயர்ந்த நிலையில் மாலையில் சரிந்தது. ஒருகிராம் சில்லரை வெள்ளி 60 காசுகள் குறைந்து ரூ.82.80க்கு விற்பனையாகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஆக-202018:33:49 IST Report Abuse
சிவா இங்க சொல்லிருக்குற நம்பருக்கும் கடைக்காரன் சொல்ற நம்பருக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது. மக்களும் மங்குகளாகவே கடைசிவரை தங்கம் வாங்குவர்.
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
11-ஆக-202017:37:20 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே குருட் ஆயில் - தங்கம் - அமெரிக்க டாலர் இந்த மூன்றில் தான் உலக பொருளாதார நிலை சுழன்று வருகிறது. இதில் ஏதாவது ஒன்று ஏறும் ஏறிக்கொண்டே இருக்கும். எது என்று முடிவு செய்வது பெரும் பணக்காரர்கள்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
11-ஆக-202016:56:04 IST Report Abuse
 Muruga Vel ரஷ்யா கோரோனோ தடுப்பு வாக்சின் கண்டுபிடித்ததாக அறிவிப்பு வெளியிட்டதன் எதிரொலி .. குருட் ஆயில் விலை ஏறும் ..தங்கம் விலை இறங்கும் ..பங்கு சந்தை புது உச்சத்தை தொடும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X