பொது செய்தி

இந்தியா

சமூக இடைவெளியுடன் செங்கோட்டையில் சுதந்திர தின விழா: பிரதமர் 90 நிமிடம் உரையாற்றுகிறார்

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Independence Day, Prime Minister, Modi, Red Fort, செங்கோட்டை, சுதந்திர தின விழா, பிரதமர், உரை

புதுடில்லி: கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாற்றங்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கும் சுதந்திர தின விழா இந்தாண்டு செங்கோட்டையில் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி 73வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா சூழல் காரணமாக நாட்டின் தலைநகரிலும் மற்ற மாநிலங்களிலும் இந்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றும் விழாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா இல்லை என பரிசோதனை முடிவு வந்த வீரர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

சுதந்திர தினத்தன்று காலை 7.21 மணிக்கு பிரதமர் மோடி செங்கோட்டை மைதானத்திற்கு வருகை தருவார். அங்கு 22 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் முப்படைகளின் ராணுவ மரியாதையை ஏற்றுக்கொள்ளுவார். மேலும் 32 வீரர்கள் தேசிய மரியாதை செலுத்துவார்கள். இவர்களுடன் 350 டில்லி போலீசாரும் பங்கேற்பார்கள். விழாவின் போது அனைத்து வீரர்களும் நான்கு வரிசைகளில் நின்று சமூக இடைவெளியை பின்பற்றுவார்கள். பின்னர் 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் உரையாற்றுவார்.


latest tamil news


நிகழ்ச்சியில் பங்கேற்கும் படை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் ஒத்திகையை தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களது வீட்டு பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றொரு பெரிய மாற்றமாக இந்தாண்டு சுதந்திர தின விழாவில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்க மாட்டார்கள். 500 என்.சி.சி மாணவர்கள் மட்டும் பங்கேற்க உள்ளனர். கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் 3,500 பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக 300 முதல் 500 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில், இம்முறை 120 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த கேமராமேன்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். தனியார் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி இல்லை. பிரதமருக்கு அருகே சென்று படம் எடுக்கும் புகைப்படக்காரர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,இந்தியா
12-ஆக-202010:44:14 IST Report Abuse
sahayadhas ஐயா, வெள்ளைகாரரிடம் கொள்முதல் செய்தது, சீனாவின் வளர்சியை போல் பெரிய சிலை எழுப்பியது, பெரிய கோவில் கட்ட போவது, கழிவறை கட்டியது, சுத்தம் செய்தது, குறைவான நாளில் அதிக வீரர்களை பலி கொடுத்தது இவைகளை விவரிக்கவே இந்நேரமும் போதாது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஆக-202008:23:01 IST Report Abuse
Lion Drsekar வேகமான உலகம், யாருக்குமே ஐந்து நிமிடத்துக்கு மேல் எந்த உரையையும் கேட்க்கும் அளவுக்கு பொறுமை இல்லை, ஆகவே சுருக்கமாக செய்தியைக் கூறிவிட்டு சீக்கிரமாக வந்தவர்களை வீட்டுக்கு அனுப்புவதையே எல்லாருமே விரும்புவார்கள், தவறு இல்லை என்று நினைக்கிறேன், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஆக-202007:06:02 IST Report Abuse
Lion Drsekar 74 வது ஆண்டாவது மக்களுக்கு சுதந்திரம் கிடைக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X