அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் வேட்பாளர் யார்: அ.தி.மு.க.,வில் விவாதம் ஆரம்பம்!

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
AIADMK, OPS, EPS, CM Candidate, election, Tamil Nadu CM, அதிமுக

வரும் சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த மோதல், அ.தி.மு.க.,வில் துவங்கி உள்ளது. இதை அமைச்சர்களே துவக்கி வைத்திருப்பது, தொண்டர்களிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க.,வில், அவர் வைப்பது தான் சட்டம். அவர் பேச்சுக்கு, எதிர் பேச்சே இல்லாமல் இருந்தது. போர்க்கொடிஅவருக்கு சட்டச் சிக்கல் ஏற்பட்ட போதெல்லாம், பன்னீர்செல்வத்தை தான் முதல்வராக்கினார். ஜெயலலிதா மறைந்த பின்னரும், பன்னீர்செல்வம் முதல்வராக தொடர்ந்தார். ஆனால், சசிகலா செய்த சதியால், பன்னீர்செல்வம் பதவி விலகினார்; அவருக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார்.

சசிகலா சிறை செல்ல நேரிட்டதால், அவரது ஆதரவுடன், இ.பி.எஸ்., முதல்வரானார். பின்னர், அவருக்கும் சசிகலா குடும்பத்தினருக்கும் இடையே, மோதல் வெடித்தது. சசிகலாவை எதிர்க்க, பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்து ஆட்சியை தொடர்ந்தார். பன்னீர்செல்வம், துணை முதல்வரானார். இது பழைய வரலாறு.

அதன்பின், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக, பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக, இ.பி.எஸ்.,சும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சிக்கு, ஓ.பி.எஸ்.,சும், ஆட்சிக்கு, இ.பி.எஸ்.,சும் என, பேசப்பட்டது. ஆனால், ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால், இ.பி.எஸ்., கையே ஓங்கி இருக்கிறது. அவரது ஆதரவாளர்கள், பன்னீர் ஆட்களை புறக்கணித்து வருகின்றனர்.

அதிருப்தியில் உள்ள பன்னீர் ஆதரவாளர்கள், தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என, அமைதி காத்து வந்தனர். சமீபத்தில், நிர்வாக ரீதியாக, கட்சி மாவட்டங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் நடந்தது. முதலில், இ.பி.எஸ்., தரப்பு உருவாக்கிய நிர்வாகிகள் பட்டியலில், பன்னீர் ஆதரவாளர்கள் இடம் பெறவில்லை.


களத்தை சந்திப்போம்


இதனால், கோபமடைந்த பன்னீர், அந்த பட்டியலை ஏற்க மறுத்து விட்டார். அதன்பின், அவரது ஆதரவாளர்களுக்கும் பதவி அளித்த பிறகே, புதிய பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தார்.அடுத்த ஆண்டு, சட்டசபை பொதுத் தேர்தல் வர உள்ள நிலையில், தன் பிடியை விட்டு கொடுத்து விடக் கூடாது என்பதில், பன்னீர் உறுதியாக உள்ளார்.

இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக யாரை முன்நிறுத்துவது என்ற விவாதம், தற்போது எழுந்துள்ளது. இ.பி.எஸ்., ஆதரவாளர்கள், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, கூறி வருகின்றனர். அதேநேரம், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் என்பதால், பன்னீர்செல்வத்தையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தேர்தலை சந்திக்க வேண்டும் என, அவரது ஆதரவு வட்டாரம் கூறி வருகிறது.

இது, வெளிப்படையான மோதலாக உருவெடுக்காத நிலையில், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, நேற்று முன்தினம், செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் கூடி, முதல்வரை தேர்வு செய்வர்' என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'இ.பி.எஸ்., என்றும் முதல்வர்; இலக்கை நிர்ணயித்து விட்டு, களத்தை சந்திப்போம். 'இ.பி.எஸ்.,சை முன்நிறுத்தி, தளம் அமைப்போம்; களம் காண்போம்; வெற்றி கொள்வோம்; 2021ம் நமதே' என, பதிவிட்டுள்ளார்.


சலசலப்பு


இது, அ.தி.மு.க., வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் முதல்வர் வேட்பாளர் என, ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ்., ஆதரவாளர்களிடம், மோதல் உருவாகி உள்ளதை, இது, அம்பலப்படுத்தி விட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம், அ.தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இல்லையேல், இதுவே பெரிய விவாதமாக வெடித்து, மீண்டும் கட்சியில் பிளவை ஏற்படுத்தி விடக்கூடும் என, கட்சி வட்டாரத்தில் அஞ்சப்படுகிறது.

-- நமது நிருபர்- -

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-202022:04:38 IST Report Abuse
oce தமிழர்கள் வேறு. இந்துக்கள் வேறா.எந்த அகராதியில் படிச்ச.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-202021:59:48 IST Report Abuse
oce கந்தன் அருள் கிடைத்து விட்டது. இனி அதிமுகவிடம் ஆட்சி போகும்.
Rate this:
Cancel
Santhosh Gopal - Vellore,இந்தியா
12-ஆக-202021:59:27 IST Report Abuse
Santhosh Gopal எடப்பாடி வல்லவர். இந்த விவகாரத்தை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு தெரியும். அவர் பதவி ஏற்ற போது இதை விட மோசமான (யாரும் ஏற்றுக்கொள்ளாத நிலை) அதை மாற்றி பிரிந்து சென்றவர்களும் திரும்ப வரவழைத்து கட்சியை கட்டு கோப்பாக நடத்தி வருகிறார். எடப்பாடி தலைமையில் தான் அதிமுக தேர்தலை சந்திக்கும். ஏன் என்றால் எடப்பாடி ஆட்சி புரிகிறார், புரிந்தார் என்று மக்களுக்கு தெரியும் ஆனால் ஓ.பி.எஸ் எப்படி ஆட்சி புரிந்தார் என்று மக்கள் பார்க்கவில்லை காரணம் இடைக்கால முதல்வராக ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக மட்டுமே இருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கட்டுமரத்திற்கு பிறகு அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்த பெருமையை பெற்றுள்ளார். மேலும் எடப்பாடி தலைமையில் பல தேர்தல்கள் சந்தித்தது அதிமுக, அதில் பாராளுமன்ற தேர்தலை தவிர மற்ற அனைத்திலும் வெற்றி. ஆனால் ஓ.பி.எஸ் தலைமையில் இன்னும் ஒரு தேர்தலை கூட அதிமுக சந்தித்ததில்லை. அதனால் ஓ.பி.எஸ் தலைமையில் தேர்தலை சந்திக்க ஓ.பி.எஸ்ஸே ரிஸ்க் எடுக்க மாட்டார். பண்ணீர் செல்வமும் நன்கு அரசியலை உணர்ந்தவர். இபிஎஸ், ஒபிஎஸ் ஒப்பிட்டால் சுடலை ஒன்றும் இல்லை. மேலும் எடப்பாடி பாராளுமன்ற தேர்தலில் முட்டை வாங்கி பிறகு வேலூர் தேர்தலில் சுடலையை நாக்கு தள்ளவிட்டு, பிறகு விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதியில் அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் படி 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்று திறமையை நிரூபித்தவர். இது வெறும் தற்காலிகம் தான், ஒ.பி.எஸ் தலைமையில் தேர்தலை சந்திக்க ஓ.பி.எஸ்ஸே விரும்ப மாட்டார். என்னுடைய கருத்து, எடப்பாடி முதல்வர், பண்ணீர் துனை முதல்வர், இப்படி தான் தேர்தல் நடக்கும். அதே சமயத்தில் எனக்கென்னவோ இது திமுக கூடாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த அதிமுக போடும் ராஜ தந்திரம், எப்படி என்று கேட்கிறீர்களா, இவர்கள் முதல்வர் பதவிக்கு சண்டை போடுவதை போல காட்டினால், திமுக வில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் முதல்வர் பதவி மீது ஆசை வரும், கு.க செல்வம், துரை முருகன் போல பல பேர் போர் கொடி பிடிப்பார்கள். ஏற்கனவே ஆ.ராசா திமுக தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்று மீம்ஸ்கள் உலா வருகிறது. அதிமுக சண்டையை பார்த்து திமுகவிலும் சண்டை வர வேண்டும் என்பது தான் இதன் நோக்கம் என்பது என்று நினைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X