அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறப்பு நிதியாக ரூ. 9,000 கோடி வேண்டும்: பிரதமரிடம் இ.பி.எஸ்., வலியுறுத்தல்

Added : ஆக 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை; ''தமிழகத்தில், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, சிறப்பு நிதியாக, 9,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்,'' என, பிரதமரிடம், முதல்வர் இ.பி.எஸ்., கோரிக்கை விடுத்தார்.க்ஷகொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள, ௧௦ மாநிலங்களின் முதல்வர்களுடன், நேற்று பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:தமிழகத்தில், 61
 சிறப்பு நிதியாக ரூ. 9,000 கோடி வேண்டும்: பிரதமரிடம் இ.பி.எஸ்., வலியுறுத்தல்

சென்னை; ''தமிழகத்தில், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, சிறப்பு நிதியாக, 9,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்,'' என, பிரதமரிடம், முதல்வர் இ.பி.எஸ்., கோரிக்கை விடுத்தார்.க்ஷ
கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள, ௧௦ மாநிலங்களின் முதல்வர்களுடன், நேற்று பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:தமிழகத்தில், 61 அரசு ஆய்வகங்கள், 69 தனியார் ஆய்வகங்கள் என, 130 ஆய்வகங்களில், தினமும், 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மிக குறைவு

இதற்காக தினமும், 5 கோடி ரூபாய் செலவாகிறது. இதில், 50 சதவீதத்தை, மத்திய அரசு வழங்க வேண்டும்.தமிழகத்தில் இதுவரை, 32.92 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3.02 லட்சம் பேருக்கு, நோய் தொற்று உறுதியானது. தற்போது, 53 ஆயிரத்து, 99 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதுவரை, 80.8 சதவீதமாக, 2.44 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

சிறப்பான மருத்துவ சிகிச்சை காரணமாக, இறப்பு விகிதம், 1.6 சதவீதமாக, நாட்டிலேயே மிக குறைந்த அளவில் உள்ளது.முன்களப் பணியாளர்களுக்கு, கபசுர குடிநீர், சிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கொரோனா மருத்துவமனை மற்றும் பாதுகாப்பு மையங்களில், படுக்கைகள் எண்ணிக்கை, 1.29 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.அதிக அளவில், வென்டிலேட்டர்கள் கொள்முதல் செய்ய, மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்.

இலவச அரிசி மற்றும் கொண்டை கடலை வழங்கும் கால அளவை நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கது.தமிழக மக்களின் உணவு முறையில், கொண்டை கடலை பிரதான உணவுப் பொருளாக இல்லை. எனவே, தமிழகத்தில், நவம்பர் வரை, மக்களுக்கு இலவச பருப்பு வழங்க, 55 ஆயிரத்து, 637 டன் துவரம் பருப்பு வழங்க வேண்டும்.தமிழகத்திற்கு, கொரோனா தடுப்பு நிதியாக, 712.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை இரு தவணைகளாக, 512.64 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நடவடிக்கைஏற்கனவே நான் கோரியபடி, இத்தொகையை, 3,000 கோடி ரூபாயாக, உயர்த்தி வழங்க வேண்டும்.ஜி.எஸ்.டி., வருவாய் குறைந்து உள்ளதால், அந்த பற்றாக்குறையை ஈடு செய்யவும், கொரோனா தொற்றை எதிர்கொள்ளவும், மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக, 9,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். இதில், பொருளா தாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, ஜி.எஸ்.டி., இழப்பீடு தொகையை, உடனே விடுவிக்க வேண்டும்.

தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து, உடனடியாக, 1,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.நெல் கொள்முதல் மானிய தொகை, 1,321 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்திற்கு, ரிசர்வ் வங்கியின் சிறப்பு திட்டத்தில், 1,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.மின் துறையில், உடனடி சுமையை குறைக்க, நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும். கொரோனா சிறப்பு கடனாக, அனைத்து வங்கிகளிலும், சுய உதவி குழுக்களுக்கு, குறைந்தது, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Chennai,இந்தியா
12-ஆக-202016:00:24 IST Report Abuse
Ramesh எல்லா அமைச்சர்களுக்கும் இது பிரித்து கொள்ள போதுமோ போதாதோ? ஒன்றுமே இல்லாத பாவப்பட்டவர்கள்...
Rate this:
Cancel
12-ஆக-202008:37:17 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு வென்டிலேட்டரால பிரயோஜனம் இல்ல ஆனா வெண்டிலேட்டர் வாங்கி குவிக்க துட்டு வேணும் தேர்தலுக்கு எட்டே மாசம்தான் இருக்கு அதனால போற போக்குல கொஞ்சம் சுருட்டிக்கிட்டு போக ஆசைப்படுறோம்
Rate this:
Cancel
12-ஆக-202008:17:36 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு வெண்டிலேட்டர் வைப்பதால் பயனில்லை என்று டாக்டர்கள் கருதுவதாக செய்திகள் வருது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X