பொது செய்தி

தமிழ்நாடு

காட்டு யானைகளை காப்போம்; வளர்ப்பு யானைகளை மதிப்போம்

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Elephant, World Elephant Day, Save Elephants, யானைகள், பாதுகாப்பு, உலக யானைகள் தினம்

இயற்கையை பாதுகாப்பதோடு பல்லுயிர் பெருக்கும் காட்டு யானைகளை பாதுகாப்பதும், பணம் சம்பாதித்து தரும் வளர்ப்பு யானைளை மதிப்பதும் நம் கடமை. யானை, மனித மோதல் தவிர்க்க அதன் வழித்தடங்களை மீட்க வேண்டியது நாம் பொறுப்பு என்பதை உலக யானைகள் தினமான இன்று உறுதிமொழியாக ஏற்க வேண்டும்.யானைகள் இலை, செடி, கொடி, மூங்கில், கரும்புகளை விரும்பி சாப்பிடும். தினமும் 16 மணிநேரம் உணவு சேகரிக்கும். செரிமான திறன் குறைவாக இருப்பதால் 40 சதவீதம் தான் செரிமானமாகும். வளர்ந்த யானை 270 கிலோ வரை சாப்பிடும், 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். யானை சாணத்தில் வெளியேறும் செரிக்காத விதைகள் இயற்கை விதை பந்து போல் பரவி துளிர்த்து வளரும். இப்படி யானைகள் செல்லும் இடமெல்லாம் இயற்கை வளம், பல்லுயிர்களை பெருக்கி செல்கிறது.


latest tamil newsகஜ சாஸ்திரம் நுால்


ஊட்டி வனஉயிர் அறக்கட்டளை வனஆர்வலர் சரவணன் கூறியதாவது: பயிர்களை சேதமாக்கும் யானைகளை சிறைபிடித்த வங்க மன்னரிடம் யானைகளுக்காக குரல் கொடுத்த பாலகாப்யா முனி 1958ல் சமஸ்கிருதத்தில் 'கஜ சாஸ்திரம்' நுால் எழுதினார். தொன்மை கோயில்களில் யானை, மனித மோதல் சிற்பங்கள் இருப்பதை பார்க்கும் போது பல ஆயிரம் ஆண்டுகளாக யானைகள் குறித்த புரிதலில் பிரச்னை இருப்பது தெரிகிறது. இன்றைய சூழலில் காடுகளின் எல்லை குறைந்ததால் புற்களை விட ருசியான விவசாய உணவு பொருட்களை சாப்பிட ஊருக்குள் யானைகள் வருகிறது. அது வருகிறது என்பதை விட அதன் வீட்டிற்குள் நாம் இருக்கிறோம் என்பது தான் சரி.


யானைகளின் உடல் அமைப்பு


நீரில் முழ்கி வெளியேறும் போது தன் முதுகில் உள்ள சிறு பூச்சிகளை விரட்ட யானை மண் அள்ளி போடும். யானைகளின் குணம், உடல்வாகு, வசிக்கும் இடத்தை பொறுத்து அமையும். தும்பிக்கையை ஒட்டி கீழ்நோக்கி தந்தம் கொண்ட யானை யாரை துாக்கலாம் என்ற வெறியில் திரியும். முதுகில் எலும்பு துாக்கிய யானை திமிர் பிடித்தது. ஒழுங்கற்ற, ஒற்றை தந்த யானை ஆட்கொல்லி. இதன் உடலில் மாமிச துர்நாற்றம் வீசும். இது போல் தோற்றம் பார்த்து யானையின் குணங்களை அறியலாம்.


latest tamil newsயானை மேலாண்மை சட்டம்


இந்தியாவில் 2011 யானை மேலாண்மை சட்டப்படி காட்டு யானைகளை வளர்ப்பு யானைகளாக விற்க, வாங்க முடியாது. 2011க்கு முன் வாங்கிய யானைகளை கோயில்களுக்கு தானமாக தரலாம். கோயில், வீடுகளில் யானை வளர்ப்போர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வளர்ப்பு யானை ஆடி கொண்டே இருந்தால் மனஅழுத்தம் என அர்த்தம்.வளர்ப்பு யானைகள் அதிகம் நடக்காததால் நகங்கள் வளர்ந்து தரையில் குத்தி பாத நோய் ஏற்படும். இந்நிலையில் வலியை சொல்ல தெரியாமல் பாகன்களை பதம் பார்க்கும்.


யானைக்கு 'மேட்டிங்' சாத்தியமா


தமிழகத்தில் பெரும்பாலும் பெண் யானைகள் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கும் பெண்கள் போல் மாதவிலக்கு., தாய்மை உணர்வு உண்டு. ஆனால், வளர்ப்பு பெண் யானையை 'மேட்டிங்' செய்ய முகாமில் உள்ள ஆண் யானையிடம் அழைத்து செல்ல வேண்டும். 3 மாதம் தனிமைப்படுத்தி, ஆண் யானையுடன் 2 மாதம் பழகவிட்டு மேட்டிங் செய்ய வைக்க வேண்டும். 20 மாதங்களுக்கு பின் குட்டி யானை பிறக்கும் வரை முகாமில் இருக்க வேண்டும். 2011க்கு பின் யானை வாங்க, விற்க கூடாது என சட்டம் சொல்லும் போது குட்டி யானை வாங்குவதற்கு சமம். எனவே, தை தாய் யானையுடன் ழைத்துவர முடியாது. இது போல் நடைமுறை சிக்கல்களால் தான் 'மேட்டிங்' குறித்து அரசு இதுவரை திட்டமிடவில்லை, என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
12-ஆக-202019:29:59 IST Report Abuse
Raj கோவில் யானைகளை காட்டில் விட்டு விடுதலை கொடுங்கள்
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
12-ஆக-202011:18:00 IST Report Abuse
Rameeparithi யானையை காப்போம் ஆரண்யம் வளர்ப்போம்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஆக-202009:28:31 IST Report Abuse
Lion Drsekar மனிதனாவது பரவாயில்லை ஒரு இடம் இல்லையென்றாலும் ஒரு இடம் இருக்கிறது , ஆனால் பாவம் இவர்களுக்கு இவர்களைத்தவிர யார் இருக்கிறார்கள், நம்மிடம் இருக்கும்போது அடிமையாக இருந்தால் மட்டுமே வாழ்க்கை, அங்கு அவர்கள் குடும்பத்துடன் வாழ்வதற்கும் மனிதனின் தயவு தேவை. வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X