பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணை குறித்து சர்ச்சை வீடியோ வெளியீடு; தமிழக விவசாயிகள் கொந்தளிப்பு

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
கூடலுார்: பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை, கேரள திரைப்பட தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். இதனால், தமிழக விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோய் என்பவர், இரண்டு வாரங்களுக்கு முன், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், பெரியாறு அணை பலமிழந்து விட்டதாகவும், 2018 ஆகஸ்டில் அணையின் நீர்மட்டம், 142 அடியைக் கடந்த போது, கேரளாவில்
Periyar Dam, Animation Video, Kerala, Tamil nadu, பெரியாறு அணை, வீடியோ, சர்ச்சை, கேரளா, தமிழகம், விவசாயிகள்

இந்த செய்தியை கேட்க

கூடலுார்: பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை, கேரள திரைப்பட தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். இதனால், தமிழக விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோய் என்பவர், இரண்டு வாரங்களுக்கு முன், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், பெரியாறு அணை பலமிழந்து விட்டதாகவும், 2018 ஆகஸ்டில் அணையின் நீர்மட்டம், 142 அடியைக் கடந்த போது, கேரளாவில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டதால், அணையின் நீர்மட்டத்தை, 130 அடியாக குறைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த வழக்கு, ஆக., 24ல் விசாரணைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், எடிட்டருமான பிரதீப் எமிலி, 'முல்லைப் பெரியாறு ஒரு முன்கருதல்' என்ற பெயரில், ஏழு நிமிடங்கள் ஓடக்கூடிய, '3 டி அனிமேஷன்' குறும்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.


latest tamil news


அதில், 'நுாற்றாண்டுக்கு மேல் பழமையான பெரியாறு அணை, எப்போது வேண்டுமானாலும் உடைந்து ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கலாம். எனவே, தற்போதைய அணையில் இருந்து, சற்று தள்ளி புதிய ஆர்ச் அணை கட்டி, இந்த இரண்டு அணைகளுக்கும் இடையில், மண் அல்லது கான்கிரீட்டால் நிரப்பி பலப்படுத்த வேண்டும். 'இதன் மேல்பகுதி வழியாக வல்லக்கடவு, கெவி சுற்றுலாத் தலங்களுக்கு, சுற்றுலாப் பயணியரை அழைத்துச் செல்வதால், கேரள சுற்றுலாத் துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.எனவே, மக்கள் இந்த கோரிக்கையை முன்னிலைப்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பல்வேறு நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்து, 'அணை பலமாக உள்ளது' என தெரிவித்த பின், 'அணையில், 142 அடி வரை நீர் தேக்கலாம்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்தவர்கள், பிரச்னைக்குரிய வீடியோவை வெளியிட்டு வருவது, தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-202004:03:00 IST Report Abuse
J.V. Iyer இது கம்யூனிஸ்ட்கள் சூழ்ச்சி. சைனாவில் பல அணைகள் பலமிழந்து வருவதை உலக நாடுகள் பறைசாற்றுகின்றன. அதற்கு எதிராக இங்கு உள்ள மாவோயிஸ்ட்கள், கம்யூனிஸ்டிகள் இங்கு தங்கள் வேலையை காட்டுகின்றனர்.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
12-ஆக-202019:42:56 IST Report Abuse
Nathan நம்பாதே, கேரளத்தானை நம்பாதே, கிருஷ்ந மேனன், அந்தோணி, ஸ்வப்னா, பொனநாரி வரை பக்க செல்பிஸ் யோக்கியனுங்க. பக்கத்தில் பேசிக்கிட்டே நமக்கு குழியை வெட்டுவானுங்க.
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
12-ஆக-202016:11:33 IST Report Abuse
vasan ஏற்கனவே உலகம் முழுக்க இவனுங்களோட அயோக்கியத்தனம் நாறிப்போச்சு.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X