பொது செய்தி

தமிழ்நாடு

உடலுக்குதான் சிகிச்சை... மனதுக்கு தேவை அமைதி கோவை 'கொடிசியா'வில் நோயாளிகள் உற்சாகம்

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: கோவை கொடிசியாவில் கொரோனா நோயாளிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை, யோகா, நடை பயிற்சி, சித்தா மருத்துவம், சுகாதாரமான உணவு என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதனால், நோயாளிகள் மன உளைச்சலை மறந்து, உற்சாகத்துடன் உள்ளனர்.அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று உடையவர்கள், கொடிசியா உள்ளிட்ட சிறப்பு சிகிச்சை மையங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். சிறப்பு சிகிச்சை மையங்களில்
உடலுக்குதான் சிகிச்சை,மனதுக்கு தேவை அமைதி, கோவை கொடிசியா,நோயாளிகள் உற்சாகம்

கோவை: கோவை கொடிசியாவில் கொரோனா நோயாளிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை, யோகா, நடை பயிற்சி, சித்தா மருத்துவம், சுகாதாரமான உணவு என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதனால், நோயாளிகள் மன உளைச்சலை மறந்து, உற்சாகத்துடன் உள்ளனர்.

அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று உடையவர்கள், கொடிசியா உள்ளிட்ட சிறப்பு சிகிச்சை மையங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். சிறப்பு சிகிச்சை மையங்களில் மொத்தம் 1,976 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொடிசியாவில் மட்டும் 670 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், தற்சமயம் 203 பெண்களும், 467 ஆண்களும் சிகிச்சையில் உள்ளனர். பொதுவாக, கொரோனா பயத்தை காட்டிலும் தன் குடும்பத்தினர், 14 நாட்கள் தனிமையில் இருப்பதை நினைத்துதான் பல நோயாளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அந்த அச்சத்தை போக்கி, மன ரீதியாக ஒரு நல்ல சூழலை உருவாக்கிடவே இந்த சிகிச்சை மையங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்குவது, யோகா பயிற்சி, சித்த மருத்துவம், காலையில் நடை பயிற்சி, சுகாதாரமான உணவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.


latest tamil news


'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட நபர் ஒருவர் கூறியதாவது:காலை 7:00 மணிக்கு காபி, குழந்தைகளுக்கு பால், 8:00 மணிக்கு இட்லி, பொங்கல், சப்பாத்தி, கிச்சடி இவற்றில் ஏதேனும் ஒன்று, 11:00 மணிக்கு டீ, சுண்டல், தட்டைபயிர், கடலை இவற்றில் ஏதேனும் ஒன்று ஸ்நேக்ஸாக கொடுக்கப்படும். 11:30க்கு, யோகா பயிற்சி, ஆர்வமுள்ளவர்களுக்கு சித்தா சிகிச்சை வழங்கப்படும். 12:00க்கு கபசுர குடிநீர், ஒரு மணிக்கு சாப்பாடு, சாம்பார், ரசம், அல்லது வெரைட்டி சாதம் வழங்கப்படும். முட்டை மற்றும் பழம் கட்டாயம் இருக்கும்.மீண்டும், 4:00 மணிக்கு டீ, சுண்டல், 8 மணிக்கு சப்பாத்தி, இட்லி கொடுக்கப்படும். உணவை பொறுத்தவரை எந்த குறையும் சொல்லமுடியாது. காலையில் குறிப்பிட்ட துாரம் நடை பயிற்சிக்கு அனுமதியளிக்கப்படுகிறது. எல்.சி.டி.,புரொஜெக்டரில் சினிமா பார்க்கலாம். கேரம்போர்டு, செஸ் விளையாடலாம். குடும்ப உறுப்பினர்களிடம் எந்தநேரத்திலும் பேசிக்கொள்ளலாம். இதனால், நோய் பாதித்தாலும், மனம் அமைதியாக இருந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.


'மனரீதியாக சிகிச்சை'

மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில்,''கொரோனா குணப்படுத்த சிகிச்சை ஒரு புறம் இருந்தாலும், மன ரீதியாகவும் அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காகவே, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உணவுகளும், அரசு விதிகளின் படிதான் வழங்கப்படுகிறது. நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பை அறிந்து கொள்வதற்காக, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி உள்ளது. தற்சமயம், 'டி' மற்றும் 'இ' ஹாலில், 670 படுக்கை வசதி உள்ளது, ''கூடுதலாக 'சி' ஹாலில் 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இரண்டு நுழைவாயில்கள், செக்யூரிட்டி சிஸ்டம், 4 இன்டர்காம்கள், 'சி.சி.,'டிவி' கண்காணிப்பு போன்ற வசதிகளும் உள்ளன,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
12-ஆக-202017:46:01 IST Report Abuse
Thiagarajan Kodandaraman மக்களுக்காக சேவை செய்யும் மிக பெரிய எண்ணம் கொண்ட கொடீசியா தொண்டு போற்றத்தக்கது ...நீடுழி வாழ்க ..அந்த செயல் உறுப்பினர்கள் தலைவர்கள் மற்றும் அணைத்து ஊழியர்களும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X