பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயத்திற்கு பயன்படும் அமோனியம் நைட்ரேட்

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Ammonium nitrate, chennai, chennai news, beirut blast,
விவசாயம், அமோனியம் நைட்ரேட்,

இந்த செய்தியை கேட்க

சென்னை; தமிழகத்தில், விவசாய தேவைக்காக, கால்சியம் கலந்த அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில், அமோனியம் நைட்ரேட் வெடி விபத்தால், 138 பேர் உயிரிழந்தனர்.


நுண்ணீர் பாசனம்

இந்நிலையில், தமிழகத்தில், சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட, 740 டன் அமோனியம் நைட்ரேட், சென்னை மணலியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் உள்ள கிடங்கில், ஐந்து ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.அதனால், அந்த அமோனியம் நைட்ரேட் ஏலம் விடப்பட்டு, அதில் பெரும்பகுதி, தெலுங்கானா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.


latest tamil news
இந்நிலையில், வெடிபொருளான அமோனியம் நைட்ரேட்டுடன், கால்சியம் கலந்து, தமிழகத்தில், விவசாய தேவைக்கு பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.ஆண்டுதோறும், தமிழக விவசாயிகள், 200 டன் கால்சியம் அமோனியம் நைட்ரேட்டை, மண்ணில் தழைச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்துக்களை வழங்க, நீரில் கரையும் உரமாக பயன்படுத்தி வருகின்றனர். காய்கறிகள், பழங்கள், தென்னை, கரும்பு உள்ளிட்ட, பலவகை பயிர்களுக்கும், நுண்ணீர் பாசனம் வழியாக அவை தெளிக்கப்படுகின்றன. அவற்றை இறக்குமதி செய்து, விற்பனை செய்ய, சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


விழிப்புணர்வுதொடர்ந்து, கால்சியம் அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தினால், மண்வளம் பாதிக் கப்படும் வாய்ப்புள்ளது. மேலும், இது விவசாயிகளுக்கு சுவாச பிரச்னை உள்ளிட்ட பாதிப்புகளையும் உருவாக்கும். எனவே, இதுபோன்ற ரசாயனங்களை, உரமாக பயன்படுத்துவதை குறைக்க, வேளாண் துறை நடவடிக்கை எடுப்பதோடு, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பட்டி சுப்பையா (DMK திரும்ப வந்தா நாடு நாசமா போகும் ) - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி ,இந்தியா
12-ஆக-202014:08:30 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா (DMK திரும்ப வந்தா நாடு நாசமா போகும் ) வால்பாறை என்ற இயற்கை காடுகளாலான வனத்தை அழித்துதான் தேயிலை தோட்டங்கள் வந்தது. ஆனால் போராளிகள் என்னவோ விவசாயி தான் இயற்கையை காக்கிறான்னு புரியாம பேசுவாங்க. ஒரு கிலோ நெல் விளைவிக்க 5000 லிட்டர் தண்ணீர் செலவு. இயற்கையை அழிப்பதுதான் விவசாயம். அப்புறம் நானும் விவசாயி தான். இயற்கையை காக்கணும்னா செல்போன், டிவி, மிக்ஷி கிரைண்டர் உள்ளிட்ட அனைத்தையும் தூக்கி போட்டுட்டு காட்டுக்குள்ள இலைகளை உடுத்திக்கொண்டு பழங்களை மட்டுமே நீ திம்பீன்னா, போராளியா இரு. அல்லது வளர்ச்சியை புரிந்துகொண்டு மனிதனா இரு.
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
12-ஆக-202013:29:37 IST Report Abuse
Ramalingam Shanmugam ஹைதெராபாத் போகிறது கவனம் தேவை தீவிரவாதிகள் சிக்கிவிட வாய்ப்பு உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X