யார் இந்த கமலா ஹாரிஸ்?

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
Kamala Harris, india, US, US election, அமெரிக்கா, துணை ஜனாதிபதி, தேர்தல் கமலா ஹாரீஸ், ஜோ பிடன்

வாஷிங்டன்: வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிடுவார் என ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

தற்போது 55 வயதாகும் கமலா ஹாரிஸ் தாயார் இந்தியாவை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இதன் மூலம், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமை கமலா ஹாரீசுக்கு கிடைத்துள்ளது.


latest tamil news


கடந்த 1964ம் ஆண்டு ஆக்லாந்தில் பிறந்த கமலா ஹாரீசின் தாயார் ஷியாமளா கோபாலன் ஹாரீஸ். மார்பக புற்றுநோய் விஞ்ஞானி. தந்தை டொனால்ட் ஹாரீஸ். ஸ்டான்போர்டு பல்கலையில் பொருளாதார பேராசிரியராக இருந்தார். கமலாஹாரீசின் சகோதரி, மாயா ஹாரீஸ், கடந்த 2016 ல் அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக செயல்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்தார்.

கடந்த 1998 ம் ஆண்டில் பிரவுன் பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த பின்னர், கலிபோர்னியா பல்கலையில் சட்டப்படிப்பு முடித்தார். இதன் பின்னர் சான்பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் பணிபுரிந்தார். அவர் கிரிமினில் பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2003 ல், சான் பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்னியாக தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட அட்டர்னியாக இரண்டு முறை பணியாற்றிய பின்னர், கடந்த 2011 ல் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக தேர்வு பெற்றார். இதன் மூலம் அந்த பதவிக்கு தேர்வு பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.

2017 ல் கலிபோர்னியாவிலிருந்து செனட்டராக பதவியேற்றார். இனவெறிக்கு எதிரான வழக்குகளில் கமலா ஹாரீஸ் ஆஜராகியுள்ளார். ஓரின சேர்க்கையார் திருமணங்களுக்கு ஆதரவு அளித்த அவர், கருப்பினத்தவர் வாழ்க்கை விவகாரம் இயக்கத்திற்கு ஆதரவாக பேசி பலரின் ஆதரவை பெற்றுள்ளார். கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது குறித்தும் பேசியுள்ளார். அதிபர் டிரம்ப்பின் கொள்கைகள் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.


latest tamil newsகலிபோர்னியாவின் முதல் பெண் அட்டர்னி ஜெனரல், அமெரிக்க செனட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தெற்காசிய பெண், இரண்டாவது கறுப்பின பெண் என்ற பெருமையும் கமலா ஹாரீசுக்கு உண்டு. அதிபர் வேட்பாளருக்கான களத்தில் முதலில் கமலா ஹாரீசும் இருந்தார். பின்னர், டிசம்பர் மாதம், ஜோபிடனுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
14-ஆக-202008:57:55 IST Report Abuse
Sampath Kumar அங்கே போயி யாரோ ஒரு ஹாரிஸை திருமணம் ?? செய்து செட்டில் ஆகி இப்போ போட்டி போடுகிற அளவிற்கு வந்து விட்டார் ??? ஆக உங்களுக்கு சாதகமாக விஷயம் நடந்தால் அதுக்கு மட்டும் வாய் தீர்ப்பது எல்லை மாறாக எதிராக நடந்தால் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குரங்கு போல தவுவீர்கள் இல்லையா ?
Rate this:
Cancel
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
13-ஆக-202015:39:17 IST Report Abuse
Ravi Beware Indians in USA Kamala Harris mother may be Indian but she is completely against India and Kashmir - she support Kashmir terrorists and Pakistan. Her Democratic party and its top leaders and US ex-presidents like Obama are heavily influenced by Islamist and communist philosophies If Democractic candidates Joe Biden and Kamala Harris elected, lot of things will be drastically changed in America including China policy, Islamic terrorist immigration more particularly policy about India By Trump and India's initiatives, world's most powerful nations are just united to oppose China's aggressive hegimonial attitude and mostly contolled terrorism If the current momentum to continue we need Trump in the White House. As an Indian, we want Trump to continue as President and most Indians irrespective of partyline should vote for Trump If no,t China and Islamist terrorism will gain momentum - more viruses, terrorism will spred lightening fast Trump may not be diplomatic, polished politician but he is an ardent patriotic person He never compromised with anything for our country's best interest, security, freedom, trade etc Some of the past presidents are compromised manythings to gain popularity, personal fame, legacy at the cost of our country and American people They let China to grow monster and we now paying the price Neighbors are threatened, friends are cheated/espinoged and part of smaller poor countries are colonized with debt trap etc. To stop this Vote For Trump to have Better Peaceful world - we need Trump in White House for another 4 years
Rate this:
Cancel
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
13-ஆக-202007:00:16 IST Report Abuse
Ravi கமலா ஒரு தீவீர கம்யூனிஸ்ட், முஸ்லிமிஸ்ட் இவர் இந்தியாவுக்கு எதிரான எண்ணம் கொண்டவர் இந்தியனாக பெருமைப்பட்டாலும் - இவரின் இந்திய - காஷ்மீர் எதிர்ப்பு பிரச்சாரத்தால் இவர் வெற்றிபெறக்கூடாது என்பதே பல அமெரிக்கா வாழ் இந்தியர்களின் விருப்பம். மீண்டும் சீன வுடன் நட்பாகிவிடுவார்கள் அல்லது சீன செய்யும் அட்டுழியங்களை கண்டுகொள்ளாமல் விடுவார்கள். இன்றுள்ள நிலைமையில் இந்தியாவை எதிர்க்கும் இந்தியரைவிட சீனாவை எதிர்த்து இந்தியாவிற்கு உதவும் தற்போதைய அதிபர் டிரம்ப் வருவதே நல்லது அமெரிக்கா இந்தியர்கள் செண்டிமெண்ட் பார்க்காமல் டிரம்ப் கு வோட் போட்டு வெற்றி பெற செய்யவும்
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஆக-202011:12:21 IST Report Abuse
Malick Rajaravi.சொல்வதை அவரைத்தவிர யாரும் ஏற்கமாட்டார்கள் ......
Rate this:
Kanagaraj Easwaran - Aizawl,இந்தியா
13-ஆக-202016:36:47 IST Report Abuse
Kanagaraj Easwaranதிரு ரவி சொல்வது உண்மையே கமலா ஹாரிஸ் ஒரு பாகிஸ்தான் ஆதரவாளர் அவர்களை இந்தியப் பாரம்பரியத்தினர் ஆதரிக்க மாட்டார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X