அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் பாஜ., தலைமையில் தான் கூட்டணி: தமிழக பாஜ., துணை தலைவர்

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
BJP Alliance, Election, Tamil nadu, tamil nadu elections, பாஜ, கூட்டணி, தேர்தல், தமிழகம், துணை தலைவர், விபி_துரைசாமி

சென்னை: தமிழகத்தில் வரும் தேர்தலில் பாஜ.,வை அனுசரித்து செல்லும் கட்சியுடன் தான் கூட்டணி என்றும் பாஜ., தலைமையில் தான் ஆட்சி நடைபெறும் எனவும் அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜ., மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இடஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும், இட ஒதுக்கீட்டில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை தவறு. இது அரசியலுக்காக செய்கிறார். இவ்விவகாரத்தில் பல்வேறு கட்சிகள் வழக்கு தொடுத்து இருந்தன. ஆனால், திமுக கட்சியால் தான், 27 சதவீதம் பெற்று தந்ததாக மாவட்டம் தோறும் போஸ்டர் அடித்து கொண்டனர்.


latest tamil news


திமுக தவிர வேறு எந்த கட்சியும், எங்களால் தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என்று சொல்லவில்லை. அதேபோல, கட் ஆப் மார்க் தொடர்பாக ஸ்டாலின் கூறும் கருத்து பொய். மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியது தவறில்லை. ஆனால், முன்னேறிய வகுப்புகளுக்கு 10 சதவீதம் ஒதுங்கியது தவறா என ஊடகம் வாயிலாக நான் கேள்வி கேட்கிறேன். வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு என எந்த விவகாரத்திலும் மத்திய அரசு தவறாக செல்லவில்லை. பொய் பிரச்சாரம் மூலம் மக்களை திசை திருப்ப வேண்டாம். ஸ்டாலினை நான் கேட்டுக்கொள்வது, நீண்ட காலமாக ஜாதியை சொல்லி அரசியல் செய்து விட்டீர்கள், இனி இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.


latest tamil news


திமுக அதிக எம்.பிக்களை கொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் அவர்கள் தான் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசுவதை விட, வெளியில் வந்து தான் அதிகம் பேசுகின்றனர். வெளிநடப்பு செய்வதை மட்டுமே முதல் காரியமாக அவர்கள் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் கோவிட் காலத்தில் ஆக்கபூர்வமான கருத்துகளை, யோசனைகளை அளிக்க வேண்டும். கனிமொழிக்கு விமான நிலையத்தில் இந்தி மொழியால் பிரச்னை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. முறையாக விசாரித்தால் உண்மை தெரியும். கனிமொழி கருத்திற்கு ஆதரவளிப்போரின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

தமிழகத்தில் திமுக - அதிமுக என்ற நிலை மாறி, திமுக - பாஜ., என்ற நிலை உருவாகியுள்ளது. பாஜ.,வை எந்த கட்சி அனுசரித்து செல்கிறதோ அவர்களுடன் தான் கூட்டணி; பாஜ., தலைமையில் தான் ஆட்சி நடைபெறும். பாஜ.,விற்கு திமுக.,விலிருந்து யார் வருவார்கள் என்று கூறுவது நாகரிகமாகாது, நிச்சயம் நிறைய பேர் வருவார்கள்; நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், அவர்கள் (திமுக) அதிர்ச்சியாவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஆக-202011:46:55 IST Report Abuse
Malick Raja தாமரை இல்லாதாக்க திமுக செய்த சதி என்று பின்னர் பாஜகவினர் புலம்புவார்கள்
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-202000:50:42 IST Report Abuse
Ramesh R முக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க வைக்கும்
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
12-ஆக-202021:08:13 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ராஜஸ்தானிலா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X