அரசியல் செய்தி

தமிழ்நாடு

பூசணிக்காயை விட்டுவிட்டு புளியங்காய்க்கு ஆசைப்படும் தமிழக எதிர்க்கட்சிகள்!

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (82)
Share
Advertisement

கோவை: தமிழகத்தின் இயற்கை வளத்தை அபகரிக்கும் அண்டை மாநிலங்களையும், தமிழகத்திற்கான அங்கீகாரம் மறுக்கப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பாமல், அரசும், எதிர்க்கட்சியினரும், மலிவான அரசியலில் ஈடுபடுவது அபத்தமாகவுள்ளது.latest tamil news
கேடயமாகும் சிறுவாணி!


மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் கோவையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும், சிறுவாணி அணை உள்ளது. கடந்த, 7ம் தேதி, 30 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அன்று ஒரே நாளில், 363 மி.மீ., மழை பெய்தும், பாதுகாப்பு காரணங்களை கூறி, தண்ணீரை திறந்து விட்டது, கேரள அரசு. இரு நாட்களில், 12 அடி தண்ணீரை வெளியேற்றியது.


latest tamil newsகடந்த, 2017ல் கடும் வறட்சி ஏற்பட்டு, சிறுவாணி அணை நீர்மட்டம் குறைந்து, மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்க வேண்டிய நிலை உருவானது. அப்போது, 'ஆழியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் வழங்கினால் மட்டுமே, கோவைக்கு சிறுவாணியில் இருந்து தண்ணீர் தர முடியும்' என, கேரள கம்யூ., அரசு நிபந்தனை விதித்து, தமிழகத்திற்கு நெருக்கடி கொடுத்தது.


latest tamil news
தொடரும் புறக்கணிப்பு


கோழிக்கோடு விமான நிலையத்தை விட பல வகைகளில் கோவை விமான நிலையத்தின் தரம் நன்றாக உள்ளது. தற்போதுள்ள தரத்துக்கே துபாய், ஓமன், மஸ்கட், மலேசியா, அபுதாபி, தாய்லாந்து போன்ற இடங்களுக்கு விமான சேவைகள் வழங்கலாம். ஆனால், கேரள அரசின் நெருக்கடியால், கோவை விமான நிலையம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.


latest tamil newsகோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானம், இரண்டு முறை வானில் வட்டமடித்து இறங்க முயன்றுள்ளது. இந்த நேரத்துக்கு, அந்த விமானம் கோவைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம். அங்கிருந்து கோவை வர, 15 நிமிடங்களே தேவைப்பட்டிருக்கும். கோவையில் அந்த விமானம் இறக்கப்பட்டிருந்தால், கோழிக்கோட்டின் முக்கியத்துவம் குறைந்திருக்கும். அதைத் தவிர்க்கவே அந்த விமானத்தை அங்கு தரையிறக்கி விபத்தில் சிக்கவைத்துள்ளனர். இனியாவது, தொழில் வளர்ச்சி, கார்கோ சேவைகளை கருத்தில் கொண்டு கோவை போன்ற விமான நிலையத்தை முழு அளவில் பயன்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


latest tamil newsஇப்படி கோவை மாவட்டத்திற்க்கு மட்டுமே இரு பெரும் முக்கியப் பிரச்சினைகள் இருக்கையில், நம் அரசு மற்றும் எதிர்க்கட்சியினர் இவற்றின் மீது துளியும் அக்கறை செலுத்தாமல் உள்ளனர்.

மேலும், இந்தி மட்டுமே பேசத் தெரிந்த, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,) பெண் காவலர் ஒருவர், தி.மு.க., - எம்.பி., கனிமொழியிடம் 'உங்களுக்கு இந்தி தெரியாதா' எனக் கேட்டதை முக்கியப் பிரச்சனையாக மாற்றியுள்ளனர்.

அந்த பெண் காவலர் பணிக்கான தகுதி 10ம் வகுப்பு மட்டுமே. 10ம் வகுப்பு படித்த ஒருவரிடம், ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் சரளமாகப் பேசும் ஆற்றல் குறைவாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர், தனக்கு தெரிந்த மொழி, தன்னிடம் உரையாடலில் ஈடுபடும் நபருக்கும் தெரியுமா எனக் கேட்பது சாதாரணமானதே. இந்த கேள்வியை சர்வதேச விமான நிலையங்களுக்குச் சென்றவர்களில் அதிகப்படியானோர் எதிர்கொண்டிருப்பர். இப்படி மிகச் சாதாரணமான ஒரு நிகழ்வை வைத்து, தமிழகத்தில் மொழி உணர்வுகளைத் தூண்டி அரசியல் லாபம் ஈட்டத் துடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.

தமிழகத்தில் கோவை மாவட்டத்திற்கு மட்டுமே அண்டை மாநிலமான கேரளாவின் கம்யூ., அரசால் ஏராளமான நெருக்கடிகள் உள்ளன. இது போன்ற பிரச்சனைகளில் தலையிடாமல் அதிக எம்.பி.,க்களைக் கொண்ட தி.மு.க., மவுனமாக இருப்பதும், மலிவான முறையில் மொழி அரசியலில் ஈடுபடுவதும் ஏன் என்ற கேள்வியை பாமர மக்களிடமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
16-ஆக-202012:04:33 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு முக்கியமான பல பிரச்னைகள் இருக்கும்போதே, உப்புசப்பில்லாத விவரங்களில் மக்களது கவனத்தை திசை திருப்புவது மோசடி மன்னர்களின் வாடிக்கை
Rate this:
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
14-ஆக-202019:08:06 IST Report Abuse
Subbanarasu Divakaran தமிழ் நட்டு இளைஞர்களை ஆங்கிலம் ஹிந்தி எதுவும் தெரியாமல் வளர்த்து அவர்கட்கு எங்கும் வேலை வாய்ப்பு இல்லை. பெங்களூரில் வந்த 100 தமிழ் இளைஞர்களில் 25 % கூட வேளையில் எடுக்கப்படவில்லை. இவர்கிளின் anbalippu 5
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-202012:12:22 IST Report Abuse
Rafi இந்தி மட்டுமே தெரிந்த பாதுகாப்பு படை வீரரை ஏன் தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் போதுமான ஆட்கள் இல்லையா, தமிழகத்தின் வளங்களை பல வழிகளில் கொள்ளை போவதையும் தலைப்பாக செய்தி வெளியிடலாம். பாராளுமன்றத்தில் தேவைக்கேற்ப பூசணிக்காயை பற்றி பேசுவது நடந்து கொண்டேதானிருக்கு. இப்போது தமிழக உரிமையான வேலைவாய்ப்புகள்...பட்டுக்கொண்டிருப்பதை விவாதித்தே ஆகவேண்டும்.
Rate this:
Krishnamoorthy Premkumar - Ahmadnagar,இந்தியா
13-ஆக-202022:06:47 IST Report Abuse
Krishnamoorthy Premkumarஇது நடந்தது டில்லியில் - சென்னையில் அல்ல....
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )Rafi உருது மொழியாக கொண்ட நீ அத பேசலாமா...
Rate this:
sriram - Chennai,இந்தியா
17-ஆக-202016:25:17 IST Report Abuse
sriramரியாதுல உக்காந்து என்ன விஷயம்னு தெரியாமலே கமெண்ட் போடுற அறிவு ஜீவி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X