அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்; ஜெயக்குமார் பதில்

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
AIADMK Minister, AIADMK, CM nominee, CM Candidate, JayaKumar, tn Minister, அதிமுக, முதல்வர், வேட்பாளர், ஜெயக்குமார், பதில்

இந்த செய்தியை கேட்க

சென்னை: அடுத்தாண்டு நடக்கக்கூடிய தேர்தலுக்கு இப்போது இருந்தே அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் சில அமைச்சர்கள் தங்கள் கருத்தை பதிவிட, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் முதல்வர் வேட்பாளர் குறித்து பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், அதிமுக.,வில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அமைச்சர்களிடையே தினமும் மாறுபட்ட கருத்து வந்துக்கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்துவதா, துணை முதல்வர் ஓபிஎஸ்.,சை முன்னிறுத்துவதா என்பதில் அமைச்சர்களே வேறுபட்ட கருத்தை முன்வைக்கின்றனர்.


latest tamil news


கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ‛தேர்தலுக்குப் பிறகு அதிமுக எம்எல்ஏ.,க்கள் ஒன்று சேர்ந்து முதல்வரை தேர்வு செய்வோம்,' என நழுவினார்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் முதல்வர். அவரை முன்னிறுத்தி தளம் அமைப்போம், களம் காண்போம், வெற்றி கொள்வோம்,' டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன் பங்கிற்கு, ‛எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தியே லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தலை சந்தித்திருக்கிறோம். அதே போல 2021 சட்டசபைத் தேர்தலையும் சந்திப்போம். எளிமையின் அடையாளமான முதல்வர், வலிமையான அரசு,' எனக் கூறினார்.


latest tamil news


இதற்கிடையே அதிமுக உடன் தற்போது கூட்டணியில் உள்ள பாஜ.,வின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, ‛பாஜ., தலைமையில் தான் அடுத்த தேர்தலில் கூட்டணி அமையும்', என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசியதாவது: முதல்வர் வேட்பாளர் குறித்து பொதுவெளியில் பேசுவது கட்சியை பலவீனப்படுத்துவதாகவே அமையும். முதல்வர் வேட்பாளர் பற்றி உரிய நேரத்தில் கட்சி முடிவு எடுக்கும். ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்து கட்சியின் கருத்தல்ல. அதிமுக என்ற ஆலமரம் நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே வருகிறது.
பாஜ., தலைமையில் கூட்டணி என்பதை அந்த கட்சியின் மாநில தலைவர் முருகன் கூறவில்லை. கூட்டணி பற்றி பாஜ.,வின் மாநில தலைவர் முருகன் கருத்து கூறிய பிறகே அதிமுக தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் ஆண்டுக்கு ஒரு முதல்வர்ன்னு முடிக்கலாம் பிறகு அவரவர் சமர்த்து
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
13-ஆக-202011:32:56 IST Report Abuse
Swaminathan Chandramouli முதலில் அடுத்த சட்ட சபை தேர்தலில் எத்தனை அதிமுக வேட்பாளர்கள் ஜெயிக்கிறார்கள் பார்ப்போம் கறுப்பன்கூட்டத்துக்கு அதிமுக ஆதரவு ஸ்ரீ முருகப்பெருமானையும் கந்த சஷ்ட்டி கவசத்தையும் அவமதித்த ஆ ராசாவை கண்டித்து இந்த அதிமுக கைது செய்யவில்லை . ஸ்ரீ ராமபிரானையும் , ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவையும் அவமதித்து பேசிய வீரமணியை கைது செய்யவில்லை இதையெல்லாம் இந்துக்கள் நினைவில் வைத்து கொண்டுள்ளார்கள் தக்க சமயத்தில் இதனுடைய பலாபலன் தெரியும் . இரு மொழி கொள்கை எடப்பாடிஐ கவிழ்த்து விடும் அது போலவே இந்துக்களாகிய நாங்கள் திமுக தோல்வியை தழுவ மும்முரமாக இருப்போம்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
12-ஆக-202022:13:14 IST Report Abuse
Vijay D Ratnam எங்க தெரு செட்டியார் கடையில் தினமலர், முரசொலி இரண்டும் கிடைக்கும். எனக்கு வேண்டியதை நான் வாங்கி படிக்கிறேன். அது மாதிரி இன்னார்தான் முதல்வர் ஆகவேண்டும் என்று என்னை போல சாதாரண ஒருத்தர் கேட்கமுடியாதே. இருந்தாலும் என் விருப்பத்தை சொல்கிறேன், என்னைப்போன்ற லட்சக்கணக்கான காமன் மேன் விருப்பம் என்று வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு பழனிசாமியும் வேண்டாம், பன்னீர் செல்வமும் வேண்டாம். இருவரது அரசியல் வாழ்க்கையும் மன்னார்குடி சசிகலா காலடியில் தொடங்கியது. ஒரு சில அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். அதே சமயம் அதிமுகவினரால் அருமை தெரியாமல் ஒரு அற்புதமான சட்டமன்ற வேட்பாளர் நான்கு ஆண்டுகளாக வீணடிக்கப்படுகிறார். அவர் வேறு யாருமல்ல. மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் IPS. தமிழக முதலமைச்சர் பதவிக்கு இவரை விட தகுதியான ஒரு MLA. தமிழ்நாட்டில் வேறு யாராவது இருக்கிறார்களா. தமிழக அரசியலுக்கு ஜெயலலிதாவால் அழைத்து வரப்பட்ட ஆர்.நடராஜ் IPS. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் நேர்மையான அதிகாரியாக செயல்பட்டவர், தமிழ்நாட்டின் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலிஸ், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர் போன்ற உயர் பதவியில் திறம்பட பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தனது பணிக்காலங்களில் இரண்டு முறை ஜனாதிபதி விருது பெற்றவர். இவரை விட சிறந்த ஒருவர் அதிமுகவில் இருந்தால் சொல்லுங்கள் ஜெயக்குமார் அவர்களே. அல்லது திண்டுக்கல் சீனிவாசன், சரோஜா, வளர்மதி, செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன் போன்ற அறிவுஜீவி யாரையாவது முதல்வர் ஆக்க போகிறீர்களா. எப்படி மத்தியில் ஜெய்சங்கர் IAS, அஜித் தோவல் IAS, போன்றவர்கள் அசத்துகிறார்களோ, அதுபோல ஆர்.நடராஜ் IPS. அவர்களை இப்போதே 2021 முதல்வர் வேட்பாளர் ஆக அறிவித்து பணியாற்றினால் கட்சி சாராத மக்கள் அமோக ஆதரவுடன் ஆட்சி தொடர்வது நிச்சயம். கொஞ்சம் யோசித்து பாருங்கள் அதிமுக முதல்வர் வேட்பாளர் ஆர்.நடராஜ் IPS, திமுக முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் எப்படி இருக்கும் அத விட்டுட்டு நொண்டி குதிரைகளை வைத்துக்கொண்டு ரேஸுக்கு போகாதீர்கள். ஒங்க அதிர்ஷ்டம் உங்களோட போட்டிபோடுவது ஒரு பொய்க்கால் குதிரை என்பதுதான். சூதனமா நடந்துக்குங்கோ. நிதியமைச்சராக இருக்குமளவுக்கு தகுதியும் திறமையும் கொண்ட கே.பாண்டியராஜனை வீணடித்து வைத்திருக்கிறார்கள். ஐயா கனவான்களே, அதிமுக அடித்தட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு எம்ஜிஆர் ஆரம்பித்து ஜெயலலிதா கட்டிக்காத்த மக்களுக்கான இயக்கம். அதை பாழாக்கிவிடாதீர்கள். அதிமுக தொண்டர்களே சற்று சிந்தித்து பாருங்கள். நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X