கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
Pranab Mukherjee, Daughter, Sharmistha Mukherjee, Coronavirus, Corona, Covid-19, tests positive, பிரணாப் முகர்ஜி, மகள், உருக்கம்

புதுடில்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், அவரது மகளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஷர்மிஸ்தா முகர்ஜி, தனது டுவிட்டர் பக்கத்தில் தந்தையைப் பற்றி உருக்கமான கருத்தை பதிவிட்டுள்ளார்.

டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:


latest tamil news


கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 8ம் தேதி எனது தந்தைக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. எனது வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. மிகச் சரியாக ஒரு ஆண்டுக்குப் பிறகு, அதே ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கடவுளே, எனது தந்தைக்கு எது சிறந்ததோ அதையே செய், அதேவேளை, இன்பத்தையும் துன்பத்தையும் ஒருபோல அனுபவிக்கும் சக்தியை எனக்கு வழங்கு, அனைவரின் அன்புக்கும் நான் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
14-ஆக-202002:32:19 IST Report Abuse
Aarkay Get well soon sir
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
13-ஆக-202015:30:25 IST Report Abuse
ponssasi இந்திரா மற்றும் ராஜீவால் ஓரம்கட்டப்பட்டு தனி கட்சி ஆரம்பித்து அரசியலில் இருந்து துறவறம் பூணும் நேரத்தில் மதிப்பிற்குரிய மக்கள் தலைவர் G.K.மூப்பனார் மூலம் மீண்டும் காங்கிரஸ் திரும்பினார். அதன்பின் தலைமைக்கு கட்டுப்பட்டு அரசியல் பயணத்தை தொடர்ந்தார். இறுதிவரை மூப்பனார் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். அந்த நட்பின் வெளிப்பாடுதான் இன்று G.K.வாசன் மாநிலங்களவை உறுப்பினராக BJP. இடம் சிபாரிசு செய்தவர். பிரணாப் முகர்ஜி மற்றும் மூப்பனார் குடும்பங்கள் கண்ணியமிக்க குடும்பங்கள். எவ்வளவு உச்ச பதவியில் இருந்தாலும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதவர்கள். இவர்களை போன்ற தலைவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும், வேற்று பேச்சு, மதம், சாதி, உணர்ச்சிகரமான பேச்சுக்கள், பேசும் நபர்களை மக்கள் வேரறுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
12-ஆக-202021:36:35 IST Report Abuse
Balasubramanian Ramanathan நல்ல மனிதர். நாட்டை பற்றி உண்மையான அக்கறை கொண்ட காங்கிரஸ்காரர். விரைவில் நலம் பெற கடவுளை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X