சென்னை: சென்னையில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. மேலும், அங்கு இதுவரை 98,736 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 993 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,12,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 439 பேருக்கும், திருவள்ளூரில் 407 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 371 பேருக்கும், கடலூரில் 339 பேருக்கும், கோவையில் 294 பேருக்கும், விருதுநகரில் 292 பேருக்கும், தேனியில் 282 பேருக்கும், ராணிப்பேட்டையில் 254 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

உயிரிழப்பு
இன்று சென்னையில் 20 பேரும், திருவள்ளூரில் 11 பேரும், கோவை, திருநெல்வேலியில் தலா 9 பேரும், திருப்பூரில் 7 பேரும், செங்கல்பட்டு, மதுரையில் தலா 6 பேரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் தலா 5 பேரும், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரியில் தலா 4 பேரும், சேலம், தென்காசி, விருதுநகரில் தலா 3 பேரும், ஈரோடு, பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருச்சியில் தலா 2 பேரும், அரியலூர், கடலூர், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 119 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டிஸ்சார்ஜ்
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,160 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 98,736 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 421 பேரும், திருநெல்வேலியில் 366 பேரும், காஞ்சிபுரத்தில் 318 பேரும், திருவள்ளூரில் 293 பேரும், தேனியில் 286 பேரும், விருதுநகரில் 260 பேரும், கோவையில் 212 பேரும், தூத்துக்குடியில் 207 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE